இக்காலத்தில் நமக்கு வேண்டுவது நல்ல அறிவு, நல்ல கைத்தொழில், நல்ல நாகரீகம், நல்ல நடக்கை,நல்ல சகோதரத்துவம்,நல்ல கல்வி, நல்ல ஜீவனம் முதலியவைகளேயாகும். இவைகளை விடுத்து மனிதரில் பிராமணன் இருக்கின்றான் என்றால்,அவனுக்கிருப்பது, உடல் அடையாளமா பாஷையடையாளமா?அப்படிக் கொன்றும் நிர்ணயித்து வைத்திருக்கவில்லை.

நம்மை நெடுநாளாக ஏமாற்றி வருகிற பிராமண கொள்கை,மிகத் தந்திரமானது,அதின் லக்ஷணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது.அது இருண்ட இந்தியா என்னும் பெரிய மரமாகும்.அம்மரத்திற்கு கடவுள் மதம் வேதம் ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு,அக்கிளை நடுவில் இந்து என்னும் கூடு கட்டியுள்ளது.

அக்கூட்டில் மும்மூர்த்தி மதமென்னும் கல்முட்டை இட்டு,அதைப்பார்ப்பார் என்னும் கழுகு அடைகாத்துள்ளது.தனது கல்முட்டையை பொன் முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி  வருதலைக்  கண்ணிற்கண்டும், காதாற்கேட்டும், மனதிலுணர்ந்தும், கவலையற்றிருக்கின்றோம்.

(க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் & தொகுதி ஒன்று)

ஏப்ரல் - 20 அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாள்

Pin It