குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
         (குறள் 66)

வீணையில் தோன்றும் நாதம்
 வேய்குழல் ஊதும் கீதம்
இனிமையோ இனிமை யயன்று
 எவருரைக் கின்றார் என்றால்

மடியிலே இருந்து பிள்ளை
 மழலையாய்ச் சிந்தும் சொல்லைக்
கேட்டிடா மனிதர் தானே
 கீதமே இன்ப மென்பார்

- மானம்பாடி புண்ணியமூர்த்தி