2010 மே 17 இந்து நாளேட்டில் ஒரு தலைப்புச் செய்தி. தமிழீழ மக்கள் குடியமர்வு பற்றி பற்றி விவாதிக்க ஜூன் 8ஆம் நாள் ராஜபக்ஷே இந்தியா வருகை என்று.

செய்தியைப் படிக்கிற பலருக்கும் இயல்பாய் என்ன தோன்றும் ஏதோ  தமிழீழ மக்கள் பிரச்சனை குறித்துப் பேச ராஜபக்ஷே இந்தியா வருகிறார்ப் போலிருக்கிறது. சரி, எப்படியோ  பிரச்சனை ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் போதும் என்றே தோன்றும்.

ஆனால் 8ஆம் தேதி இரவு தில்லி வந்த ராஜபக்ஷே மறுநாள்  9 ஆம் தேதி பிரதமரைச் சந்திக்க. பின் 10 ஆம் தேதி நாளேடுகளில் செய்தி வருகிறது. இருநாட் டுத்  தலைவர்களும் பொருளாதார ஒத்து ழைப்பை விரிவு படுத்துவது, எரிசக்திப் பாதுகாப்பு, அபிவிருத்தி, செய்வது  பயங்கர வாத எதிர்ப்பில் ஒத்துழைப்பது, மின்கலம், ரயில்வே மற்றும் கலாச்சரப் பரிமாற்றம், கைதிகள் பரி மாற்றம். உள்ளிட்டு 7ஒப்பந் தங்களில் கையப்ப மிட்டுள்ளனர் என்று. ஆக ராஜபக்ஷே வந்த நோக்கம் அதுதான். வந்த நோக்கத்தை நிறை வேற்றிக் கொண்ட பிறகு, அன்று மாலை தமிழீழத் தமிழர்கள். பற்றிய பேச்சு தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, இது வெல்லாம் தமிழர்களுக்கு பராக்கு காட்ட.  நடந்தேறி யிருக்கிறது.

ஏன் உண்மையிலேயே பிரதம ருக்கு அக்கறையிருந்தால், தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களை அழைத்து வைத்து, தன் முன்னிலை யிலேயே தமிழர் பிரச்ச னையை பேசச் செய்தி ருக்கக் கூடாதா! அல்லது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களாவது பிரதமரிடம் இதை வலியுறுத்தி யிருக்கக் கூடாதா எதுவுமில்லை

மாறாக முற்பகல் ராஜபக்ஷே பிரதமர் சந்திப்பு. மாலை 3.30 முதல் 3.50 வரை 20 நிமிடம் நாடாளு மன்ற  உறுப்பி னர்கள் ராஜ பக்ஷே சந்திப்பு. எங்கே சந்திப்பு. ராஜபக்ஷே தங்கி யிருந்த நட்சத்திர விடுதியில் 20 நிமிடத்தில்  இவர்கள் என்ன பேசிக் கிழித்திருப் பார்கள். எதுவும் கிழிக்க   வில்லை  என்பதைத்தான் அக்குழுவில் சென்ற டி.ஆர். பாலு எங்களுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்று பத்திரி கையாளர்களிடம் கூறி யுள்ளார். ஏன் இதை பிரதமரிடமே கூறியிருக்கலாமே.

ஆக சந்தடியில் லாமல் ஒப்பந் தங்களில் கையெழுத்துப் போட்டு காரி யத்தை முடித்துக் கொண்ட பிறகு ஈழத் தமிழர் களைப் பற்றிய செய்திகள். ஏதோ ராஜபக்ஷே இதற்கா கவே இங்கு வந்தது போலவும், பிரதமரும் இதில் மிகுந்த அக்க றையோடு இருப்பது போலவும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்திரத் தீர்வு காண வலியுறுத்தல் என்பதாகப் பத்திரிகை களுக்கு செய்திகள் தரப்பட்டன. ஆனால் உண்மையில் நிறைவேற்றப் பட்டவை பெரு முதலாளிகளின் வார்த்தக நலன்கள் தான்.

இதேபோலவே உயர் மட்ட ராணுவ உதவியும். இந்த ஒப்பந்தப்படி இந்தியா இலங்கையில் பலாலி விமான தளத்தையும. காங்கேசன்துறை  துறை முகத்தையும் சீர் செய்து தரப்போகிறது. இதற்கு முன்பே தென் இலங்கைப் பகுதியில் கொழும்பு - மதாரா ரயில் பாதையை மேம்படுத்த 67.4 மில்லியன் டாலர் இந்தியா கடன் தர இந்த ஆண்டு மார்ச் மாதமே ஒப்பந்தமாகியுள்ளது. இதே போலவே சீனாவும் இலங்கைக்கு விமான தளங்கள் அமைக்க  உதவிகளை வாரி வழங்குகிறது. இத்துடன் கொழும்பு -தூத்துக்குடி தலை மன்னார் -ராமேஸ்வரம் ரயில் பாதை இணைப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருச்சி ரயில் பாதை யின் நெடும் வழியை அகல ரயில் பாதை யாய் மாற்றும் பணியில் சென்னை - ராமேஸ்வரம் விரைவு வண்டி விருத்தா சலம் குறுக்குப் பாதை வழியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தற்போது பழைய படியே நெடும் வழிப் பாதையிலேயே விட்டுள்ளனர். அந்த ராமேஸ்வரம் விரைவு வண்டியை ஏற்கெனவே தனுஷ் கோடி   ‘படகுத் தொடர் வண்டி’ இயக் கப்பட்டதைப் போல தற்போது இந்த ராமேஸ்வரம் விரைவு வண்டியையும் இயக்க வேண்டு மென பொது மக்கள் கோரி வருவதாக செய்திகள் வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன் நீட்சி. தமிழகம், இலங்கை போக்குவரத்து இனி மிகச் சரளமாக இயங்கப் போவதுடன்.. இது நேரடி இந்திய இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கப் போகிறது என்பதும் முக்கியம் .இப்போதே 1983 முதல் நின்று போயிருந்த ராமேஸ்வரம் தலை மன்னர், நாகப்பட்டினம் கொழும்பு பகுதிப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் இந்திய ஆதிக்க நிறுவனங்கள் தங்கள் வேட் டையைத்  தொடர்வதற்கான ஏற்பாடும், அதற்கான ஒப்பந்தங்களில் கையப் பம் பெறுவதற்கு மான ஒரு  நடவடிக் கையே ராஜபக்ஷேயின் இந்திய வருகை. இதை வெளிப்படை யாகச் சொன்னால் எதிர்ப்பு வருமே என்று அஞ்சி ஆட்சி யாளர்கள் கண்டு பிடித்த  உத்திதான் ஈழத்தமிழர் பிரச்சனை குடியுரிமை. மறுவாழவு எல்லாம்.

ஆனால் இதற்கெல்லாம். ஏமா றாது தமிழகத்தில் உள்ள எல்லா தமிழ் உணர்வு அமைப்பு களுமே ராஜபக் ஷேயின் தில்லி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது தமிழக மெங்கும் கருப்புக் கொடி காட்டி கைதாயின.

இப்படித்தமிழர்களின் வெறுப் புக்குள்ளான கொலை காரப் பாவிக் குத்தான்  தில்லியில் சிவப்புக்  கம்பள வரவேற்பு, ராஜ மரியாதை உபசாரம் எல்லாம் செய்து சிம்லாவையும் யெல் லாம் சுற்றிக் காட்டி வழியனுப்பி வைத் திருக்கிறார்கள்ஆட்சியாளர்கள்

இலங்கையைத் தங்கள்  செல்லப்பிள்ளையாப் வைத்துக் கொள்ள முயலும் இந்தியா, சீனா,  அரசுகளின் போக்கை நன் குணர்ந்த ராஜபக்ஷே இந்த வாய்ப்பை நன்கு  பயன்படுத்திக் கொண்டு எல்லாரிடமிருந்தும் உதவி கள் பெற்று சிங்கள இன வெறி சாம்ராஜ் யத்தின் தமிழின அழிப்புப¢ போரை நடத்திக் கொண்டிருக்க அதற்கு எல்லா வகையிலும் துணைபோய்க் கொண்டி ருக்கிறது இந்திய அரசு.

தமிழீழ மக்களை அழிப் பதை உள்நாட்டு யுத்தம், பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கை எனச் சித்தரித்து அதை நியாயப்படுத்தி, மறை முகமாக அதற்கு உதவி செய் தும் அதன் கொடுஞ் செயல் களைக் கண்டும் காணாததும்போல் பாவலா  காட்டும் இந்திய அரசு, தன்  சொந்த நாட்டு மக்களை, இந்தியக் குடி மக்களைத்  தமிழக மீனவர்கள் மீது வாரந்தோறும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், தாக்குதல் தொடுத்தும், ஆடைகளைக் களைத்து அவமானப் படுத்தியும் வலைகள் மீன்களைப் பறிமுதல் செய்து கொடு மைப்படுத் தியும் வருகிறதே , ராஜ பக்ஷேயிடம் இந்தியப் பிரதமர்  இது பற்றி ஒரு வார்த்தையாவது பேசியதுண்டா! தட்டிக் கேட்டு எச்சரித்ததுண்டா இதுதான் தில்லி ஆட்சியின் லட்சணமா. அட சொரணை கெட்ட பாவிகளா, இது தானா நீங்கள் உங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு   வழங்கும் லட்சணம்.

நீங்கள் வேண்டுமானால் உங் கள் பிழைப்புக்கு சிங்களவன் செய்யும் அட்டுழியங்களைப் பொறுத்துக் கொண்டு அவனோடு கொஞ்சலாம் குலாவலாம்,அவனுக்குப் பட்டுக் கம் பளம் விரித்து வெண் சாமரம் வீசலாம்  ஆனால் நாங்கள் ஏனடா சகித்துக் கொள்ள  வேண்டும் இந்தக் கொடுமை களை என்று எங்களுக்குக் கேட்கத் தோணாதா. இந்தியக் குடிமகனாயி ருககும் தமிழனை, தமிழக மீனவனை, தில்லிக்காரனும் காப்பாற்ற மாட்டான் ,தமிழக அரசும் காப்பாற்றாது என்றால் அப்புறம் தமிழன் ஏன் இந்தியனாக இருக்க வேண்டும் என்கிற கேள்வி  எழாதா, தமிழனைத் தமிழனே காப் பாற்றிக் கொள்ள  தமிழனுக்கென்று  தனியே ஒரு ராணுவம், ஒரு கப்பற் படை வைத்துக் கொள்ள வேண்டும் வைத்து கொண்டால் என்ன தவறு என்று எண்ணத்தோணாதா, எல்லாவற் றுக்கும்காலம்வரும் பதில் சொல்லும்

Pin It