தமிழில் தீவிர தேடலோடு இயங்கிவரும் மொழி பெயர்ப்பாளர்கல் ஒருவர் லதா ராமகிருஷ்ணன். கல்லூரி மாணவிகளை கொண்டு ரஷ்ய சிறுவர் கதைகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்க வைத்து தொகுத்து அந்த மாணவியர்கன் பெயர்களை மொழிபெயர்ப்பாளர் என்று குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார். அடுத்த தலை முறை மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும் லதா ராமகிருஷ்ணனின் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த தொகுப்பிற்குள் மான் பிள்ளை மற்றும் அழகிய எலீனா’ என்ற ஒரு ஜார்ஜிய தேவதை கதை. ஜார்மன்னர் தன் மகனோடு ஒரு வேட்டைகாரப் பிள்ளையையும் (மான்பிள்ளை) சேர்த்து வளர்க்கிறார்......என்று தொடங்கி சுவாரசியமாக விரியும் அழகானஅரக்கன்கள்’ கதை அது. குழந்தைக் கதைகல் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அங்கே யார் சாபம் விட்டாலும் பலிக்கும். அங்கே அரக்கனை பலதலை பலகால் பல கை கொண்டிருந்தாலும் ஒரு பாலகனால் வீழ்த்தமுடியும்.

இந்தக் கதைகளை வாசிக்கும்போது திரும்பத் திரும்ப கல்லூரி மாணவியரின் மொழிபெயர்ப்பு இத்தனை எமையாக இலக்கிய சிரத்தையுடன் வந்திருப்பதை பாராட்டமல் இருக்க முடியவில்லை...கதைகள் தேர்வும் சுவாரசியமாக வந்துள்ளது.

மான்பிள்ளை மற்றும் அழகிய எலீனா (ருஷ்ய சிறுவர் கதைகள்)

லதா ராமகிருஷ்ணன் (தொகுப்பு)

புதுப்புனல் வெளியீடு, சென்னை - 5.

பக்கம் 117, ரூ.50

- இரா.நடராசன்

 

Pin It