இந்தியாவின் முதலாவது கம்யூனிஸ்ட் ஏடாகிய “வேன்கார்டு” எனும் ஏட்டில் (15, ஜூன், 1923) வெளிவந்த கட்டுரை இது.

“இந்தியாவில் முதன்முதலாக பாட்டாளி வர்க்கத்தின் விடுமுறையாக மே முதல் நாள் கொண்டாடப்பட்டது.

பழுத்த இந்திய சோஷலிஸ்டாகிய எம்.சிங்கார வேலு செட்டியாரின் அழைப்பிற்கு இணங்க இரண்டு பொதுக்கூட்டங்கள் சென்னை நகரில் திறந்தவெளி இடங்களில் நடைபெற்றன. தொழிலாளரின் குறைகள், உரைகளின் பேச்சுப் பொரு ளாக அமைந்தன. தமிழில் முன்னரே வெளியிட்ட கட்சி அறிவிப்பின்படி தொழிலாளர் -விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டது என அக்கூட்டங்களில் அறிவிக்கப்பட்டது. தொழிலாளரும், விவசாயி களும் கூட்டத்தில் இருந்தனர். சொற்பொழிவுகள் தாய்மொழியில் ஆற்றப்பட்டன. அதனால் அவர் கள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டனர். மே தினம் எதைக் குறிக்கின்றது என்பது விளக்கப் பட்டது. ‘தொழிலாளர் சுயராஜ்யம்’ அடைவதற் காக அரசியல் கட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தோழர் சிங்காரவேலு அக் கூட்டங்களில் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார். மே முதல் நாள் பிறப்பை இந்தியாவில் பாட்டாளி வர்க்கத்தின் விடுமுறை நாள் என வரவேற்றார். பிற நாடுகளிலும், உலகத்திலும் ஏற்பட்டதைப் போல் இந்தியாவில் வர்க்கப் போராட்ட வளர்ச்சியை விளக்கினார். இந்தியத் தொழிலாளரின் குறிக் கோள், ‘தொழிலாளர் சுயராஜ்ய’மாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவித்தார்.

அரசாங்கம் முதலாளிகளை ஆதரித்து அதிகார நலக் கும்பல் களைப் பாதுகாக்கும்வரை தொழிலாளர் அமைப்புகள் உடைமை பறிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத் தின் நிலையை மாற்ற இயலாது. அனைத்து நாடு களில் உள்ள பாட்டாளி வர்க்கத்துடன் இந்தியத் தொழிலாளர் கொண்டுள்ள உறவும் தெளிவு படுத்தப்பட்டது. பொருளாதார அரசியல், அதிகா ரத்திற்காக நடத்தும் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த பாட்டாளி வர்க்கக் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டியதன் இன்றியமை யாமையும் வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் மகா சபைக் குள்ளாகக் கட்சிப் பணியாற்றும் என்று அறிவிக்கப் பட்டது.

அனைத்து நாடுகளின் தொழிலாளி வர்க்கத்துடன் சேர்ந்து ஆண்டுதோறும் மே முதல் நாளை பாட்டாளி வர்க்கத்தின் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இந்திய பாட்டாளி வர்க்கத்திற்குப் பொருளாதார உதவி வேண்டும் என்றும், (அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு ஒரு தொழிலாளி வர்க்க கட்சி அமைக்கப்பட வேண்டும் என்றும்), தொழிலாளர் சுயராஜ்யத்தை அடைய உலகத் தொழிலாளருடன் சேர்ந்து ஐக்கிய முன்னணி வேண்டுமென்று வலியுறுத்தியும், அரசாங்க அமைப்புகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கப் பரிவுரை செய்தும், காங்கி ரசுக்குள் ஒரு தனித்த பாட்டாளி வர்க்கக் கட்சியாகப் பணியாற்ற வேண்டும் என்பதை அறிவித்தும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டங்களில் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. இந்தியா முழுவதிலும் அதே போன்ற மே தினத்தைக் கொண்டாட வேண்டு மென்று வற் புறுத்தி மற்ற மாநிலங்களில் உள்ள ஏடுகளுக்குத் தொழிலாளர்-விவசாயிகள் கட்சியால் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.”

Pin It