“உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன் வைத்து எழுந்த அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில் நாங்கள் இந்த முழக்கத்தைப் பிரகடனம் செய்தோம். அப்போது ஒரு சில குரல்களே இதை எதிரொலித்து எழுந்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28ல் பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளிகள் அழியாப் புகழ் நினைவுக்குரிய அகிலத் தொழிலாளர் சங்கத்தில் கைகோத்து நின்றார்கள்.

karel_250இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளுக்கே நீடித்தது என்பது மெய்தான். ஆனால் எல்லா நாடுககளையும் சேர்ந்த பாட்டாளிகளிடத்தே அது உருவாக்கிய அமர ஐக்கியமானது இன்றும் நிலைத்து நிலவுகிறது என்பதோடு, என்றையும்விட வலிமைமிக்கதாய் இருக்கிறது என்பதற்கு இன்றைய தினத்தைக் காட்டிலும் சிறப்பான சான்று ஏதுமில்லை. நான் இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் இன்றைய தினம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது போர்ப் படைகளை ஒத்திகை நடத்திப் பார்வையிடுகின்றது. இந்தப் படைகள் முதன்முதலாய் ரே சேனையாய், ரே கொடியின் கீழ், ரே உடனடிக் குறிக் கோளுக்காகத் திரட்டப்பெற்றனவாய் அணிவகுத்து நிற்கின்றன.

1886ல் அகிலத் தின் ஜினீவா காங்கிரசாலும், மீண்டும் 1889ல் பாரிஸ் தொழிலாளர் காங்கிரசா லும் பறைசாற்றப்பட்டதுபோல் சட்டம் இயற்றி முறையான எட்டுமணி நேர வேலைநாளை நிலைநாட்ட வேண்டுமென்ற உடனடிக் கோரிக்கையை எழுப்பிப் பாட்டாளிப் படை வரிசைகள் அணி திரண்டிருக்கின்றன. இன்றைய இந்தக் காட்சி எல்லா நாடுகளின் தொழிலாளர்களும் மெய்யாகவே இன்று ஒன்றுசேர்ந்துவிட்டார்கள் என்பதை எல்லா நாடுகளின் முதலாளி களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் தெற்றெனப் புலப்படுத்தும்.

இதை நேரில் தம் கண்கொண்டு கண்டுகளிக்க என் பக்கத்தில் மார்க்ஸ் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!”

- பி.ஏங்கெல்ஸ்

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிஸ்ட் அறிக்கை”க்கு எங்கெல்ஸ் எழுதிய முகவுரையிலிருந்து. இருவரின் கூட்டுப்படைப்பாக 1848 -ல் இவ்வறிக்கையை வெளியிட்டபோது மார்க்ஸின் வயது 30; ஏங்கெல்ஸின் வயது 28. 1890, மே 1 அன்று லண்டனிலிருந்து ஏங்கெல்ஸ் இந்த முகவுரையை எழுதினார். அதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு 1883-ல் மார்க்ஸ் காலமாகிவிட்டார். மார்க்ஸ் நினைவு நாள் : மார்ச் 14. 

Pin It