அருணன் எழுதிய “புத்தர் -தர்மம் - சங்கம்” என்ற நூல் தெலுங்கு மொழியில் வெளிவந்துள் ளது. தெலுங்கில்: “புத்துடு -தர்மம் - ஸங்கம்”. தெலுங்கு ஆக்கம் செய்தவர் ஏ.ஜி.எத்திராஜுலு.

puttar_370“தமிழ் முற்போக்குப் படைப்பாளி அருணன் புத்தரைக் குறித்தும், பௌத்த நூலில் உள்ள அம்சங்களைக் குறித்தும் எழுதிய நூலின் தெலுங்கு மொழியாக்கம் இது. அருணன், அநேக விஷயங்கள் குறித்து நூல்கள் படைத்துள்ள திறனாளர். புத்தர், பாரத தேச வரலாற்றில் எக்காலத்திலும் சமதர்மம் கோருபவர்களுக்கு ஊக்கமளிக்கிற மகா மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவர் தனது கால எல்லை யைத் தாண்டி மனித விடுதலைக்கான மார்க் கத்திற்காகப் பாடுபட்டார். புத்தர் தமது காலத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளுக்கு இடமளிக்காத சீர்திருத்தங் களுக்காகப் பாடுபட்டார். அருணனின் இந்த நூல் பௌத்த நூல்கள் தொடர்பான அழுத்தமான செய்திகளை வழங்குகிறது.

அதன் மீது பல் வேறு விளக்கங் களை அறியத்தருகிறது.” - என்று, தெலகப்பள்ளி ரவி தாம் எழுதிய முன்னுரையில் இந் நூலை மிகவும் பாராட்டியுள்ளார். தெலகப்பள்ளி ரவி ஸாஹித்ய ப்ரஸ்தானம் (“இலக்கிய இயக்கம்”) என்ற முற் போக்கு தெலுங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். ஸாஹிதீ ஸ்ரவந்தி (இலக்கிய நதி) என்ற தெலுங்கு எழுத்தாளர் அமைப்பின் தலைவர். “ரெண்டு விதால ப்ரே ரணலு” - என்ற தலைப் பில் நூலாசிரியரின் குறிப்புரையும் இடம் பெற்றுள்ளது. இந்நூலை ஐதராபாத்தில் உள்ள பிரஜாசக்தி புக்ஹவுஸ் தெளிவான அச்சில் நல்ல தோற்றத்துடன் 50 ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளது.

- தி.வ.

முகவரி: பிரஜாசக்தி புக் ஹவுஸ், எம்.எச். பவன், 21/1, அஜாமாபாத், ஆர்.டி.சி. கல்யாண மண்டபம் அருகில், ஐதராபாத் - 20.

Pin It