அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஷேக் அப்துல் காதர்
- பிரிவு: தொழில்நுட்பம்
கியர் (Gears)
அறிவியலைப் பொருத்தமட்டில் கியர் என்பது இயந்திர ஆற்றலைக் கடத்த பயன்படும் ஒரு எளிய பொருள் ஆகும் அதேபோல் இவை குறைந்த அளவு விசையை அதிகமாக்கவோ அல்லது வேகத்தை அதிகப்படுத்தவோ பொதுவாக இயந்திரங்களில் பயன்படுகிறது. உதாரணமாக ஒரு வாகனம் மேடான பகுதியில் ஏறும் போது அதற்கு அதிகமாக விசை தேவைப்படும். அதேபோல் பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும் போது அதிக அளவு வேகம் தேவைப்படலாம். எனவே அதையெல்லாம் ஆளுமை செய்ய கியர் பயன்படுகிறது.
கியர் - என்ன? எப்படி?
உதாரணமாக நீங்கள் கொடுக்கும் ஆற்றலானது Pedalல் இருந்து Chain மூலம் Sprocket (இதுவும் ஒரு விதமான கியரே) வழியே சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. அதேபோல் தான் தானியங்கி வாகனங்களும் (Automobile). கியரானது Crank shaftல் இருந்து பெறப்படும் ஆற்றலை Drive shaftன் மூலம் சக்கரங்களுக்கு அளிக்கிறது. இதில் (Automobile) எவ்வளவோ கியர்கள் வெவ்வேறு அளவிலும் வடிவிலும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் ஆற்றல் ஒரு கியரில் இருந்து மற்றொரு கியருக்கு கடத்தப்படும்.
பொதுவாக கியரில் மூன்று பயன்பாடு உள்ளது
1) வேகத்தை அதிகரிக்க
இப்பொழுது உதாரணமாக ஒரு கியர் அமைப்பை பார்ப்போம் (Set of gear). அதில் முதல் கியரானது 24 பற்சட்டங்களையும், இரண்டாவது 12 பற்சட்டங்களையும் கொண்டுள்ளதாகக் கொள்வோம். இப்பொழுது முதல் கியரை Crank shaft உடனும், இரண்டாவதொன்றை Drive shaft உடனும் இணைத்தால் Drive shaftன் வேகம் Crank shaft ன் வேகத்தை விட இரு மடங்கு இருக்கும். ஏனென்றால் முதல் கியர் ஒரு சுழற்சியை முடித்தால் இரண்டாவது கியர் இரண்டு சுழற்சியை முடிக்கும்.
2) விசையை அதிகரிக்க
இப்பொழுது மேல் சொன்ன அதே கியர் அமைப்பில் இரண்டாவது உள்ள கியரானது 24 பற்சட்டங்களையும் முதலில் உள்ள கியர் 12 பற்சட்டங்களையும் கொண்டிருந்தால் இரண்டாவது கியரானது முதல் கியரை விட குறைவான வேகத்திலும் அதிக விசையுடனும் சுழறும்.
3) திசையை மாற்ற
ஒரு கியர் அமைப்பில் உள்ள இரண்டாவது கியரானது எப்பொழுதும் முதல் கியருக்கு எதிரான திசையிலேயே சுற்றும். ஆற்றலை பல்வேறு கோணங்களில் கடத்த பல்வேறு வடிவமைப்பு கொண்ட கியர்கள் உள்ளது. உதாரணமாக carல் differential gear box ஆனது rear axel-ன் மையப்பகுதியில் இருக்கும். எனவே ஒரு கூம்பு வடிவ Bevel Gear ஆனது drive shaft-ன் ஆற்றலை 90 Degree கோணத்தில் கொடுத்து பின் சக்கரங்களை சுழற்றும்.
கியர் எப்படி வேலை செய்கிறது?
பொதுவாக கியரானது இரண்டாகத் தான் இருக்கும் (Set). அவைகளின் விட்டமானது (Diameter) மாறுபட்டிருக்கும். உதாரணமாக முதல் கியர் அதிகமான விட்டத்தையும், இரண்டாம் கியர் குறைவான விட்டத்தையும் கொண்டிருந்தால் முதல் கியரின் சுற்றளவு (Circumference) இரண்டாம் கியரை விட அதிகமாக இருக்கும்.
C = π × d = 2 × π× r
இந்த நீள மாறுபாடுதான் கியரின் மூலம் வேகத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
முதல் கியரின் விட்டம் 30 Cm, இரண்டாவது கியரின் விட்டம் 15 Cm என வைத்துக்கொண்டால் ஒரு சுழற்சியில் முதல் கியர் நேர் கோட்டு கடந்த தொலைவு 94.25 Cm ஆகும். அதுவே இரண்டாவது கியர் 47.12 Cm ஆகும் இரண்டும்
இணைக்கப்பட்டிருப்பதால் இரண்டாம் கியர் இரண்டு சுழற்சிகளை (2×47.12 =94.25) முடிக்கும். எனவே வேகம் அதிகரிக்கும்.
விசையை அதிகரிப்பதும் அப்படிதான்.
கியர்களின் மையப்புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு இரண்டு கியர்களின் ஆரங்களின் கூடுதல் ஆகும் (R + r)
R - 15 cm (முதல் கியரின் ஆரம்)
r - 7.5 cm (இரண்டாம் கியரின் ஆரம்)
விசை அதிகரிப்பின் சூத்திரம்
T = F × R
அதாவது Lever mechanism ஆகும்
Torque (விசை) ஆனது கியரின் ஆரத்திற்கு நேர்தகவில் இருக்கும் 5 N விசை முதல் கியரில் செயல்பட்டால் கிடைக்கும் Torque ஆனது
T = 5 × 15 = 75 N.cm ஆகும்
அதுவே இரண்டாவது கியரில்
T = 5 × 7.5 = 37.5 N.cm
இப்படி தான் கியரின் விட்டத்தின் வடிவமைப்பின் மூலம் வேகத்தையும் விசையையும் தேவைக்கேற்றார்போல் மாற்ற முடிகிறது.
கியரின் அவசியம்?
உதாரணமாக ஒரு Carல் Gear box ஆனது engine-க்கும் Drive shaft-க்கும் இடையே இருக்கும் நாம் Engineஐ Start செய்யும் போது இன்ஜின் ஆனது 1000 rpm என்ற வேகத்தில் இயங்கும். இதை (ஆற்றலை) எவ்வித கியர் அமைப்பும் இல்லாமல் நேரடியாக சக்கரங்களுக்கு செலுத்தும் போது Car ஆனது திடீரென 120 Kmph என்ற வேகத்தில் இயங்க ஆரம்பிக்கும். இது தொடக்க நிலை தான். நாம் மேலும் Accelerator ஐ அழுத்தும் போது இன்ஜினின் வேகம் அதிகரிக்கும். எனவே வாகனமானது கட்டுப்பாட்டை இழக்கும். இதை கட்டுப்படுத்தவும் நம் தேவைகேற்ப வேகத்தையும், விசையையும் கட்டுப்படுத்த கியர் அவசியமாகிறது.
- ஷேக் அப்துல் காதர்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் முகநூல் மெசெஞ்சரில் நண்பர் ஒருவருடன் ‘சாட்’ பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். சட்டென்று ‘யூடியூப்’ வீடியோ ஒன்றை அவருக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. என்ன செய்வீர்கள்? யூடியூப் செயலியைத் திறந்து, நீங்கள் விரும்பும் யூடியூப் வீடியோவைத் திறந்து, அதன் முகவரியை நகல் எடுத்து – மீண்டும் உங்கள் மெசெஞ்சருக்கு வந்து, நகல் எடுத்த முகவரியை பேஸ்ட் செய்து… அடேயப்பா! ஒரு யூடியூப் வீடியோ லிங்கை அனுப்ப இவ்வளவு வேலை(!) செய்ய வேண்டுமா? என்று நினைக்கிறீர்களா? ஈசியாக அனுப்ப முடியாதா என்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏற்ற துணைவன் தான் ‘சாட்பாட்’ (‘ChatBot’)!
அதென்ன சாட்பாட்?
‘சாட்’ என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். முகநூல் மெசெஞ்சர், கூகுள் ஹேங்கவுட், வாட்சப், டெலிகிராம்’ போன்ற செயலிகள் மூலம் நண்பர்களுடன் உரையாடுவதைத் தான் ‘சாட்’ என்கிறார்கள். இப்போது ‘பாட்’ டிற்கு வருவோம். ரோபோ(ட்) (“RoBot”) என்பதில் இருந்து ‘பாட்’ (“Bot”) என்பதை எடுத்து இங்கே ஒட்டியிருக்கிறார்கள். இப்போது ‘பாட்’ என்றால் என்ன என்று ஓரளவு புரிந்திருக்குமே! ரோபோ(ட்) எப்படி எந்திர மனிதனாக இருந்து நமக்கு உதவுமோ, அதே போல, இந்த ‘சாட்பாட்’ தொழில்நுட்பத் துணைவனாக நம்முடைய ‘சாட்’களில் பயன்படும்.
எப்படிப் பயன்படுத்துவது?
இணையம் முழுக்க ஏராளமான ‘சாட்பாட்’டுகள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களுக்குத் தேவையான ‘சாட்பாட்’ டைத் தேர்வு செய்து கொள்ள வேண்டியது தான். ‘கூகுள் குரு’ என்று ஒரு சாட்பாட் இருக்கிறது. இந்தச் சாட்பாட்டை உங்கள் ஜிமெயிலில் (கூகுள் டாக்கில்) நண்பராகச் சேர்த்துக் கொண்டால் போதும். ‘கூகுள் குரு’வின் மெயில் முகவரி -
இன்னொரு பயனுள்ள சாட்பாட்- எக்ஸ்பென்சர். பெயருக்கு ஏற்றால் போல, உங்கள் கணக்கு வழக்குகளை நிர்வகிக்க உதவும் கணக்குப் பிள்ளை தான் – இந்த எக்ஸ்பென்சர். இந்த சாட்பாட்டைப் பயன்படுத்துவதற்கு முன்னர், அவர்களுடைய xpenser.com தளத்திற்குப் போய் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிந்து கொள்ள வேண்டும். பதிந்த பிறகு
வாட்சப்பிற்கு சாட்பாட் இல்லையா?
அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை வாட்சப் கொண்டிருந்தாலும் தொழில்நுட்ப அளவில் வாட்சப் முதலிடம் என்று சொல்லிவிட முடியாது. வாட்சப் வழியாக பிடிஎப் கோப்புகளை அனுப்பும் வசதியைக் கூட டெலிகிராம் முதலிய கட்டற்ற (ஓப்பன் சோர்ஸ்), இலவசச் செயலிகள் கொண்டு வந்து பல நாட்கள் கழித்தே வாட்சப் கொண்டுவந்தது. பிற மெசெஞ்சர்கள் எப்போதோ கொண்டு வந்து விட்ட என்கிரிப்ஷன் முறையைக் கொஞ்ச நாளைக்கு முந்தி தான் வாட்சப் கொண்டுவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போது சாட்பாட்டிலும் வாட்சாப்பை முந்தி கில்லி அடித்திருக்கிறது டெலிகிராம் மெசெஞ்சர். நீங்கள் டெலிகிராம் செயலியை உங்கள் அலைபேசியில் வைத்திருக்கிறீர்கள் என்றால் போதும்! இனிமேல் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றைத் தேட யூடியூப் செயலியோ, கூகுள் குரோம் போன்ற பிரெளசர் செயலியோ உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் டெலிகிராம் கணக்கில் இருந்து ஒரே ஒரு முறை யூடியூப் கணக்கில் (அதாவது, உங்கள் ஜிமெயில் கணக்கை) லாக் இன் செய்தால் போதும்! அதன் பிறகு ஒவ்வொரு முறை யூடியூப் லிங்கைத் தேடவும் ‘@youtube’ என்று தட்டி நீங்கள் தேடும் வீடியோ பெயரைக் கொடுத்தால் போதும். (எ.கா. நீங்கள் சென்னையைப் பற்றிய வீடியோ ஒன்றைத் தேட வேண்டும் என்றால் ‘@youtube chennai’ என்று உங்கள் டெலிகிராம் மெசெஞ்சரில் கொடுத்தால் போதும். சென்னையைப் பற்றிய வீடியோக்கள் யூடியூப் தளத்தில் இருந்து வரிசையாகக் காட்டப்படும்.)

இதே போல், @sticker (ஸ்டிக்கர்கள் மூலம் சாட் செய்ய), @music(இசையை இணையத்தில் தேட), @ImageBot (இணையத்தில் படங்கள் தேட), @PollBot (மெசெஞ்சர் குழுவில் கருத்துக்கணிப்புகளை நடத்த) எனப் பல்வேறு ‘சாட்பாட்’டுகளைக் கொடுத்து தொழில்நுட்பத்தின் அடுத்த கதவைத் திறக்கும் வழியைப் பார்த்திருக்கிறது டெலிகிராம்.
இதை எல்லாம் பார்த்த பேஸ்புக் நிறுவனம், ‘சாட்பாட்’களை நாங்களும் சீக்கிரம் கொண்டுவந்து விடுவோம் என்று அறிவிப்பைச் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறது. மைக்ரோசாப்டும் தன் பங்கிற்கு ‘டேய்’ என்றொரு சாட்பாட்டைக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.
செயலி எனப்படும் செல்போன் ‘ஆப்’கள் எப்படி சில வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு கட்டமாகப் பார்க்கப்பட்டன. அதன் அடுத்தகட்டமாக ‘சாட்பாட்’கள் இப்போது வந்திருக்கின்றன. ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கும் ஒரு செயலியை செல்பேசியில் நிறுவ வேண்டும் என்னும் நிலையை சாட்பாட்கள் மாற்றுகின்றன. நீங்கள் நிறுவி வைத்திருக்கும் மெசெஞ்சர் செயலியே பல்வேறு செயலிகளின் வேலையை ஒரே நிமிடத்தில் செய்து கொடுத்து விடும் நிலையை இவை உருவாக்கியிருக்கின்றன. அதிலும் இந்த ‘சாட்பாட்’கள் பெரும்பாலும் இலவசம் என்பதும் கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இவற்றை உருவாக்க முடியும் என்பதும் இதில் இருக்கும் இன்னொரு நன்மை.
(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் மே 1-15, 2016இல் வெளியானது)
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- ஷேக் அப்துல் காதர்
- பிரிவு: தொழில்நுட்பம்

Clutch என்பது இன்ஜினையும் கியரையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலம் ஆகும். அதாவது ஆற்றல் இன்ஜினில் இருத்து Clutch வழியேதான் கியருக்கு கடத்தப்படும்.
கிளட்சின் பாகங்கள்
Clutch disc
Clutch disc ஆனது Flywheel மற்றும் Pressure plate இடையே அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியே தான் ஆற்றல் கியருக்கு செல்லும். அதாவது Clutch disc மட்டுமே கியருக்கு செல்லும் Shaft உடன்இணைக்கப்பட்டிருக்கும். Flywheel மற்றும் Pressure plate இன்ஜினுடன் இணைந்து இயங்கும் படி அமைந்திருக்கும். எனவே Clutch plate இதனுடன் இணைவதன் மூலம் ஆற்றல் கடத்தப்படும்.
Flywheel
பொதுவாக Flywheel என்பது இன்ஜினில் இருந்து பெறப்படும் Torqueஐ சமநிலையில் வைத்திருக்கப் பயன்படும். Clutch-ஐப் பொருத்தமட்டில் Flywheel ஆனது இன்ஜினுடன் இணைந்து இயங்கும் போது Clutch plate-ன் புறப்பரப்பு Flywheel-ன் பரப்புடன் இணையும். அப்போது Torque ஆனது கியருக்கு இதன் வழியே கடத்தப்படும்.
Pressure plate
Pressure plate ஆனது clutch disc-கிற்கு மறுபுறம் காணப்படும். மேலும் இது Flywheel உடன் இணைக்கப்பட்டு ஒன்றாக சேர்ந்து இயங்கும் படி அமைக்கப்பட்டிருக்கும். இதில் முக்கியமாக diaphragm spring
பொருத்தப்பட்டிருக்கும்.
Diaphragm spring
நாம் Clutch pedal-ஐ அழுத்தும் போது clutch disc-ல் இருந்து பெறப்படும் அழுத்தத்தை குறைக்க பயன்படும் அதாவது ஒரு Throwout bearing மூலம். மேலும் அச்சமயத்தில் pressure plate மற்றும் Flywheel ஆகியவற்றிற்கு இடையே ஒரு இடைவெளி உருவாக்கப்பட்டு clutch disc இடையூறு இன்றி சீராக சுற்றும்.
Clutch disc-ல் Spring பொருத்தப்பட்டிருப்பது ஏன்?
4 Stroke இன்ஜினில் Flywheel ஆனது எல்லா நேரமும் ஒரே சீராக இயங்காது. Power stroke-ன் போது திடீரென அதிகமாகலாம்; இதர Strokeன் போது குறையலாம். எனவே இதன் மூலம் ஏற்படும் அதிர்வுகளை குறைக்கவும், சீரான இயக்கம் பெறவும் பயன்படுகிறது. அதனால் தான் தற்போதைய வாகனத்தில் dual mass flywheel பயன்படுத்தப்படுகிறது. DMF ஆனது தானாகவே இன்ஜினில் இருந்து பெறப்படும் அதிர்வைக் குறைக்கும்; Spring தேவைப்படாது.
Performance clutch என்றால் என்ன?
Performance clutch-ல் தரமான heavy spring பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலும் Clutch disc ஆனது பல வகையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் Heavier spring பயன்படுத்தப்படுவதால் இதன் மூலம் அதிகப்படியான Torque-ஐ கடத்தி கியருக்கு கொடுக்கலாம்.
Clutch disc-ஐ கரிம சேர்மங்களில் இருத்து தயாரிப்பதின் மூலம் அது நீடித்து உழைப்பதாகவும், Flywheel உடன் சீராக இணையக்கூடியதாகவும் இருக்கும். மேலும் Cevler, carbon, ceramic போன்றவற்றை பயன்படுத்தினால் அதிக வெப்பநிலையிலும் சீராக இயங்கும்.
Performance cluth-ல் clutch disc ஆனது பகுதி, பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும. (Star வடிவில்) ஏனென்றால் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும், மேலும் குறைந்த பரப்பில் செயல்படும் விசையில் இருத்து
அதிக அழுத்ததைப் பெறமுடியும். சில பொருட்கள் அதிக அழுத்தத்தில் சிறப்பான பிடிமான விசையைத் (Grip) தரும். எனவே அவ்வகையான பொருட்களில் இருந்து Clutch disc தயாரிக்கப்படுகிறது.
அதிக ஆற்றல் மிக்க வாகனத்தில் பயன்படுத்தப்படும் Performance Clutch disc ஆனது Star வடிவில் இல்லாமல் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் வெப்பநிலையை சமன் செய்ய சிறிய அளவில் Cut off செய்யப்பட்டிருக்கும்.
மேலும் Sintered steelல் தயாரிக்கப்படும் Clutch ஆனது மற்றைய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் Clutch ஐ விட அதிக வெப்பநிலையையும் தாக்குப்பிடித்து, அதிகப்படியான பிடிமான விசையையும் தரும்.
இவை தான் Performance clutch ஆகும். எனவே தான் தற்போதைய வாகனங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது.
- ஷேக் அப்துல் காதர்
- விவரங்கள்
- ஷேக் அப்துல் காதர்
- பிரிவு: தொழில்நுட்பம்

பொதுவாக ஒரு பொருளை நிலையாக வைக்க அதன் மீது செயல்படும் அனைத்து எதிரெதிர் விசைகளையும் சமன் செய்ய வேண்டும். இதேபோல் ஒரு பொருளை காற்றில் (உயரத்தில்) நிலையாக வைக்க அதன் மீது செயல்படும் எதிரெதிர் விசைகளை சமன் செய்ய வேண்டும்.
உதாரணமாக ஒரு விமானம் வானில் பறக்கும் போது அதன் மீது நான்கு விசைகள் செயல்படும். அவை
1) Lift (மேல் நோக்கிய விசை)
2) Weight (கீழ் நோக்கிய விசை (புவியீர்ப்பு விசை))
3) Thrust (முன்னோக்கிய விசை)
4) Drag (பின்னோக்கிய விசை)
இதில் Lift மற்றும் Weight விசைகள் ஒன்றை ஒன்று சமன் செய்யும் போது (பறந்து கொண்டிருக்கும் போது), விமானம் நிலையாக இருக்கும். இப்போது இன்னும் உயரமாகப் பறக்க வேண்டும் என்றால் Lift விசையின் அளவு Weight விசையின் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும் அல்லது கீழிறங்க வேண்டுமானால் Weight விசையின் அளவு Lift ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்.
Weight விசை என்பது விமானத்தின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை ஆகும்.
Lift விமானத்தின் வடிவமைப்பில் இருந்து பெறப்படுகிறது. விமானத்தின் வடிவமைப்பு Aerodynamic வடிவமைப்பு ஆகும். அதாவது காற்றை கிழித்துக் கொண்டு செல்லும். இதன் இறக்கையின் மேல்பகுதி சற்று வளைந்தும் (curve shape) கீழ்பகுதி நேராகவும் இருக்கும். எனவே இது காற்றில் அதிவிரைவாக நகரும் போது இதன் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு விமானத்திற்கு Lift விசையைக் கொடுக்கும்.
எனவே விமானம் பறப்பதற்கென எந்த ஒரு தனிப்பட்ட கருவியும் கிடையாது, அது காற்றைக் கிழிக்கும் படி அதிவிரைவில் நகர்ந்தால் போதும். இப்படி விமானத்தை அதிக வேகத்தில் நகர்த்த பயன்படு ம் விசைதான் Thrust
ஆகும். இந்த விசை இதன் Engineல் இருந்து பெறப்படுகிறது.
பொதுவாக மூன்று வகையான Engine உள்ளது. அவை,
1) Piston engine
2) Jet engine
3) Rocket engine
ஆனால் இதன் இயக்க செய்முறைகள் ஒரேமாதிரியாகவே இருக்கும். அவை,
1) Engine-ல் எரிபொருள், ஆக்ஸிஜன் அல்லது ஆக்ஸிஜனூக்கியுடன் (Oxidizer) ஒன்று சேருதல்
2) எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜன் கலவை பற்ற (Ignite) வைத்தல்
3) பிறகு எரிபொருள் எரிந்து வெப்ப ஆற்றலை உருவாக்கும். இந்த வெப்ப ஆற்றல் உள்ளிருக்கும் வாயுவை விரிவடையச் செய்து, அதிக அழுதத்தை (Pressure) உருவாக்கும்.
4) இந்த அழுத்தம் Thrust விசையை உருவாக்கும் (Jet மற்றும் Rocket engineகளில்) அல்லது Piston-ஐ கீழ்நோக்கித் தள்ளி, ஆற்றலைத் தரும்
இன்ஜின் எவ்வாறு முன்னோக்கு (Thrust) விசையை உருவாக்குகிறது?
இதற்கான பொதுவான விடை Newton's third law. ஆனால் இது Thrust விசையின் விளைவு சம்பந்தமானதே தவிர அதற்கான காரணம் சம்பந்தபட்டதல்ல. இந்த Aerodynamic விசைகளுக்கான அடிப்படை காரணிகள் அழுத்தமும் (Pressure) Shear force-ம் ஆகும். அதுவும் engine அல்லது Propeller உந்து விசையை உருவாக்குவதற்கான அடிப்படை காரணியே அழுத்தம் தான்.
Piston type இன்ஜின் நேரடியாக Piston மூலம் உந்து விசையை உருவாக்காது. இது Piston-ல் இருந்து பெறப்படும் ஆற்றலின் மூலம் Propeller-ஐச் சுழற்றி அதன் மூலம் உந்து விசையை உருவாக்கும்.
ஆனால் Jet மற்றும் Rocket type இன்ஜின்கள் சற்று மாறாக எரிபொருளில் இருந்து பெறப்படும் வெப்ப ஆற்றலின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட வாயுவை விரிவடையச் செய்யும். எனவே இங்கு வாயுவானது அதிக அழுத்தத்தை அடையும். இப்படி அதிக அழுத்தத்தில் உள்ள வாயு Engineன் பின்புறம் உள்ள ஒரு சிறு துவாரம் (Nozzle) வழியே அதிக விசையோடு வெளியேறும். இப்போது தான் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி விமானத்தின் இன்ஜின் உந்து விசையைப் பெறும்.
இப்படித் தான் விமானம் பறக்கிறது.
- ஷேக் அப்துல் காதர்
- நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்
- இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா?
- ஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்?
- ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்
- இலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா?
- Facebook’இன் அடுத்த நாடகம்
- அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்?
- Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம்
- அணுசக்தி மனித குலத்திற்குத் தேவையா?
- ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள்
- ஹிக்ஸ் போசான் (கடவுள் துகள்?!)
- மூளை சித்தரிக்கப்படுகிறது
- அணுசக்தி சட்டம் 1962
- கோமாவில் கிடப்பவர்கள் முன்னே
- இந்திய அணுசக்தி துறையின் திட்டமும் திண்டாட்டமும்
- இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள்
- அணு உலை எதிர்ப்பும் உலக நாடுகளும்
- செர்னோபில் அணு உலை விபத்து
- அமெரிக்காவும் அணுசக்தித் திட்டங்களும்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.