நாம் ஏன் வளர்ந்து மூப்பு எய்துகிறோம் என்பதனை விளக்குவதற்கு அறிவியலார்கள் மூன்று முக்கிய கொள்கைகளைப் படிப்படியாக உருவாக்கியுள்ளனர்.

உயிர்மங்களின் இழப்பு அல்லது மாற்றிவைக்க இயலாத பகுதிகளின் இழப்பு முதற் காரணமாகும். மூளை உயிர்மங்கள் ஆயிரக்கணக்கான நூற்றுத் தொகுதிகள் ஐயத்திற்கிட மின்றிச் செத்துவிடுகின்றன. மனித வாழ்வில் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு இந்த உயிர்மங்கள் மீண்டும் உற்பத்தி செய்யப்பட முடியாது.

udalum-marunthum_370ஆயினும் இது முழுமையான விளக்கம் ஆகாது. ஏனெனில் மூளையிலும் உடலிலும் பெருமிழப் புற்ற மனிதர்கள் மூப்புத் தன்மையைக் கட்டாயமாக அடையாமலும் இருக்கின்றனர். மேலும் விலங்குகள் அதே வேகத்தில் உயிர்மங் களின் அழிவால் துன்புறினும் மூப்பெய்தும் வயது விகிதம் முழுவதும் வேறுபட்டுக் காணப்படுகிறது.

புது உயிர்மம் தோன்றல் அல்லது மாற்றம் பெறுதல், இரண்டாம் காரணமாம். பகுக்கும் உயிர்மம் எப்போதும் சரியாகவே பகுக்கும் எனக் கூறுவதற்கில்லை. இயற்கையான கதிர்களின் (natural radiation) பரவுதலால் எல்லா வகையான பிழைகளும் படரத் தொடங்கலாம். சில சமயங் களில் தோன்றிய உயிர்மங்கள் துன்பமாய் அமையலாம். நாளமில்லாச் சுரப்பிகள் (endocrine glands) குருதியின் மூலக் கூறுகள் (constituents of the blood) போன்ற பிற உயிர்மங்களை ஆற்றல் இழக்கச் செய்து விடக்கூடும். 1960 ஆம் ஆண்டில் இந்தக் கொள்கையை மேலும் வலுப்படுத்த, மிக வயதான கிழவியின் பத்து சத உயிர்மங்கள் X (எக்ஸ்) இனக்கீற்றை (X Chromosome) இழந்திருப்பதைக் கண்டுபிடித்தமை துணையாக உதவிற்று.

மூன்றாம் காரண விளக்கம் பெரும்பாலோரால் இப்போது நம்பப்படு வதில்லையாயினும் அறியத்தக்கது. தேவையில்லாத வேதியியற் பொருள் களின் குவிப்பையே மூன்றாம் விளக்கமாகச் சொல்லி வந்தனர். சில முக்கிய பொருட்கள் உயிர்மப் பகுதியில் மாற்றி வைக்கப்படக்கூடும். தேவையான பொருள்களின் குறைபாட்டுக்கோ அல்லது கூடுதலுக்கோ உயிர்மப் பகுதியில் இழக்கப்படும் விகிதாச்சாரம் வழி நடத்திச் செல்லும்.

எனவே மூப்பு எய்த இரண்டு காரணங்களே வலுவாகக் கூறப்படுகின்றன எனக் கொள்ளலாம். 

Pin It