ஊட்டக்குறைக் கோளாற்று நோய்களுக்குச் சிகிச்சை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் லிண்ட்(James Lind) ஆவர். அவர் ஹேம்ப்ஸ்பயிரி (Hampshire) கோஸ்போர்டில்(Gosport) ராயல் கப்பற்படை சார்ந்தவர்களுக்காக ஹேஸ்லார் (Haslar) மருத்துவமனையில் மருத்துவராயிருந்தபோது ஆய்ந்தவையும் ஆங்கிலேயக் கப்பற்படைச் சிகிச்சையாளராயிருந்து கண்ட அனுபவமும், இவர் கண்டுபிடிப்புக்கு உதவின.
கோஸ்போர்ட்டில் (Gosport) பிறந்த லிண்ட், கப்பலில் உள்ள உணவையும் குறிப்பாகக் கப்பலோட்டுநரின் கட்டுப்பாடான உணவையும் கூர்ந்து நோக்கி ஆயிரக்கணக்கானவர்கட்கு இவ்வகை நோய் உண்டாகக் காரணம் கணித்தார். 1753 ஆம் ஆண்டில் இது குறித்து ஆய்வுக்கட்டுரை (A Treatise of the Scurvy) ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் எலுமிச்சை, அதன் சாறு, புதிய காய்கறிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு எடுத்து மொழிந்தார். போரில் இறப்பதை விட உணவுச் சத்துக்குறை (வைட்டமின் சி) நோயால் மாண்ட ஆங்கிலே யக் கப்பற்படையினர் அதிகமாயிருந்தனர்.
இந்த நூலை வில்லியம் மாங்கவுஸ் (Williams Monkhouse), வில்லியம் பெர்ரி (Williams Perry) என்பவர்கள் “எண்டவர்” (Endeavour) கப்பலில் மருத்துவராய் இருந்தபோது கற்றார்கள். அக்கப்பல் கேப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook) என்ற புகழ்பெற்ற ஆங்கிலேயே ஆய்வாளரான தலைவரின் கீழ் இருந்தது. நியூஜிலாந்துக்குப் பயணம் போயிற்று. அவர் லிண்டாவனி; கோட்பாடுகளை அப்பயணத்தின்போது மூன்றாண்டுகளும் பின்பற்றியதால் வைட்டமின் “சி” ஊட்டச் சத்துக் குறை நோயால் இறந்தவர் ஒருவரே. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஹாலந்து கப்பலோட்டிகள் ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தம், கிச்சிலி, முந்திரி ஆகியவற்றின் பழச் சாறுகளை உண்டதால் பெருநலம் பெற்றனர். ஆனால் லிண்ட் புத்தகம் வெளியிடும்வரை ஊட்டச்சத்துக்குறை நோய்களுக்கும் உணவுச் சத்துக் களுக்கும் அதற்கான சிகிச்சை முறைக்கும் உள்ள தொடர்புகள் அறிவியல் ரீதியில் நிறுவப்படவில்லை.
எலுமிச்சையை உள்ளடக்கிய பேரின்பப் பழவகைகள் (citrus fruits) கப்பலோட்டுனர் உணவுப் பட்டியலில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த நோய் உடனடியாக அகன்றது. வைட்டமின் “சி” குறை காரணமாகவே சோர்வு, தொய்வுடைய எயிறு, ஆழமிக்க முழுச்சோர்வு, ஈறில் குருதிக் கசிவு போன்ற நோய்கள் உண்டாகியிருந்ததால் இந்த உணவுத் திட்டம் நோய்களை விரட்டிவிட்டது. ஆங்கிலேயக் கப்பல்களில் இவ்வாறு எலுமிச்சம் சாற்றைத் தரும் முறை, அமெரிக்கர்களை “லிமி” (Limey)) என ஆங்கிலேயக் கப்பற்படை ஓட்டுநரைச் செல்லமாக அழைக்கச் சொல்லாக்கம் செய்வதற்கு வழிவகுத்து விட்டது. பிறகு கால வட்டத்தில் இந்தச் செல்லப் பெயர் பொதுவாகப் பிரிட்டிஷ் மக்களையே குறிக்கும் பெயராய் விட்டது.