அமைதிப் பேச்சு வார்த்தைகள் முறிந்து போன பிறகு நடைபெற்ற இறுதிக் கட்டப் போர், குறிப்பாக இறுதி மாதங்கள்'' பற்றி விசாரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு விசாரணையை – "நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்' மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைத்த ஆவணங்கள், நவம்பர் 19, 2009 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.

da_31நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் – எந்த அரசதிகாரத்தையும் சார்ந்திராத ஓர் உலகளாவிய கருத்து தீர்ப்பாயம். மனித உரிமை மீறல்கள் குறித்தும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும் அது விசாரணைகளை மேற்கொள்கிறது.

"லெலியோ பாசோ' என்ற மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் சூன் 1979 அன்று 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்ற 5 பேர் உட்பட, பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

வியட்நாம் (1966 – 67) மற்றும் லத்தின் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974 – 76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களைத் தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் மேற்கொள்ளும் முடிவுகளின் முக்கியத்துவமும் பலமும் – அதன் முன் விசாரணைக்கு வரக்கூடிய வழக்குகளின் தார்மீக பலத்தையும், அவர்கள் முன்வைக்கும் வாதங்களின் உண்மைத் தன்மையையும், தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களின் நேர்மை மற்றும் தீர்மானிக்கும் திறன் ஆகியவற்றையும் பொருத்தது.

தீர்ப்பாயத்தின் முன் வரும் புகார்கள் பாதிக்கப்பட்டவர்களாலோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் அல்லது தனி நபர்களாலோ அளிக்கப்படுகிறது. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றாக அழைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கப் போதுமான வாய்ப்பினை வழங்குகிறது. விசாரணைக் குழு ஒவ்வொரு வழக்கிற்கும் பொருத்தமான நபர்களாகவும், தங்கள் நேர்மைக்கும் திறனுக்கும் அறியப்பட்டவர்களாகவும் உள்ளவர்களை கொண்டதாக அமைக்கப்படுகிறது.

சூன் 1979 முதல் இன்று வரை, ஏறத்தாழ 40 விசாரணைகளை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் மேற்கொண்டுள் ளது. அவற்றின் விவரங்களும் தீர்ப்புகளும் கீழ்க்காணும் தளத்தில் கிடைக்கப் பெறும் :

http://www.internazionaleleliobasso.it

da_30இலங்கை குறித்த இந்த விசாரணையை மேற்கொள்ள, சூன் 2009 லேயே பல்வேறு தரப்பினையும் சேர்ந்த பல தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் செயலரை அணுகினர். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு உலகெங்கிலும் பரவலாக தலைப்புச் செய்திகளாக ஆகிப் போகும் வகையில் – பல மாதங்கள் நடந்த ரத்த வெறி கொண்ட படுகொலைகளுக்குப் பிறகு, இலங்கை அரசு போர் முடிந்ததாக அறிவித்தது. நிலைமையின் அவசரம் புரிந்து கொள்ளப்பட்டது. கூடுதலாக, தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை உலக ஊடகங்களின் கவனத் திலிருந்து மறைப்பதற்கு துணை போன உலகளாவிய நிறுவனங்களின் அலட்சியப் போக்கிற்கு மாற்றாக, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் திறன் கவனத்தில் கொள்ளப்பட்டது.

“அமைதிப் பேச்சு வார்த்தைகள் முறிந்து போன பிறகு நடைபெற்ற இறுதிக் கட்டப் போர், குறிப்பாக இறுதி மாதங்கள்'' பற்றி விசாரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு விசாரணையை – நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைத்த ஆவணங்கள், நவம்பர் 19, 2009 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.

விசாரணை நடைமுறைகள் குறித்த விளக்கக் குறிப்பும், நிரந்தர மக்கள் தீர்ப் பாயத்தினால் டப்ளினில் நடத்தப்பட இருக்கும் விசாரணையில் பங்கேற்கக் கோரும் அழைப்புக் கடிதமும் – லண்டனில் உள்ள இலங்கை அரசின் பிரதிநிதி மதிப்பிற்குரிய நீதியரசர் நிஹால் ஜெயசிங்கேவிடம் டிசம்பர் 1, 2009 அன்று அளிக்கப்பட்டன.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் சட்ட திட்டங்களின்படியும், அதன் அறிவிப்பில் உள்ளபடியும், விசாரணையில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பு குறித்தும் – நேர்மறையான பதில் எதுவும் இல்லாத நிலையில், பொது விசாரணையில் இலங்கை அரசின் பார்வையில் கருத்துக்களை முன்வைக்க ஒருவரை நிரந்தர மக்கள் தீர்ப்பாயமே நியமித்தது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை, டிரினிடி கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் போரின் இறுதி மாதங்கள் குறித்த நேரடி சாட்சிகளின் விரிவான வாக்குமூலங்களை, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் மூடிய அறையில் விசாரித்தனர்.

இந்த விசாரணையை மேற்கொள்வதற்காக தமிழ் அமைப்புகளிடமோ, இதில் தொடர்புடைய அரசுகளிடமோ எவ்விதப் பொருளுதவியும் பெறப்படவில்லை எனவும், பல தொண்டு நிறுவனங்களின் தன்னார்வ பங்களிப்பின் மூலமாகவே தீர்ப்பாயத்தின் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன என்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உறுதி கூறுகிறது.

தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எழுத்து மற்றும் ஒளிப்பட ஆவணங்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.