சின்னக்கா சின்னக்கா
என்ன சொன்னாளாம்?
யானை முதுகில் ஏறிச்செல்ல
ஆசை என்றாளாம்!
சின்னக்காக சின்னக்கா
என்ன சொன்னாளாம்?
ஆத்துக்குள்ள படகு விடவே
ஆசை என்றாளாம்!
சின்னக்கா சின்னக்கா
என்ன சொன்னாளாம்?
ஆகாயத்துல விமானம் ஓட்ட
ஆசை என்றாளாம்!
சின்னக்கா சின்னக்கா
என்ன சொன்னாளாம்?
வண்ண வண்ண நிலவிலிறங்க
ஆசை என்றாளாம்!
Pin It