விண்மீன்கள் எல்லாமே பிரகாசமானவை அல்ல. அவற்றின் ஒளிரும் தன்மையைக் கொண்டு அவைகளை ஆறு வகையாகப் பிரிக்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். விண்மீன்களுக்கு பல்வேறு வகையான நிறங்களும் கூட இருக்கின்றனவாம்! வானில் ஒளிரும் விண்மீன்களை உற்றுப்பார்த்தாலே இந்த நிற வேற்றுமை நமக்கு எளிதில் தெரியும்.

இந்த நிறமாலையின் அடிப்படையிலே அவை ஏழுவகையாக பிரிக்கப்படுகின்றன. அவைகளுக்கு O, B, A, F, G, K, M என்று பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

O ஊதா நிறம்
B ஊதாவும், வெண்மையும் கலந்தது
A வெண்மை
F மஞ்சளும் வெண்மையும் கலந்தது
G மஞ்சள்
K செம்மஞ்சள் (ஆரஞ்சு)
M சிவப்பு

இவைகளில் O வகை விண்மீன்கள்தான் மிக அதிக அளவிலான வெப்பத்தைக் கொண்டவை. அவற்றின் வெப்பம் சுமார் 55000 பாரன்ஹீட்டுகள். எண்ணிக்கையின் அடிப்படையிலும் கூட விண்மீன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. பல விண்மீன்கள் இணைந்து இருப்பதை பலகூட்டு விண்மீன்கள் என்கிறோம்.

இரட்டை விண்மீன்களும் உண்டு. மொத்த விண்மீன்களில் மூன்று மடங்கு அளவு இவை தான். ஜெமினி, அல்கால் போன்றவற்றை இரட்டை விண்மீன்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

துடிக்கும் விண்மீன்களும் இருக்கின்றன. பல்சர் (Pulsar) அல்லது பல்சர் விண்மீன் (Pulsating Stars) என இவற்றை அழைக்கின்றனர். விட்டு விட்டு ஒளி உமிழும் 60 விண்மீன்களை இதுவரை கண்டுபிடித்துள்ளனர். ஒளிரும் தன்மை குறைந்த கோள்களைப் போன்ற வின்மீண்களுக்கு குவிசார் (Quasars) என்று பெயர். இதைப் போன்ற பலவகையான விண்மீன்களில் இருந்து தனித்தவகையில் ஒரு விண்மீன் உள்ளது. அது வானவெளியில் வேடிக்கை காட்டும் பட்டாசு போன்றது! அதை சூப்பர் நோவா என்பர். சில விண்மீன்கள் திடீரென தோன்றி, மிகவும் ஒளியுடன் ஒளிர்ந்து, வெடித்து சுருங்கும்.

உருவாகும்போது சிவந்து தோன்றும் இவற்றுக்கு செம்பூதம் என்று பெயர். பிறகு அந்தத் தீக்கோளம் சுழன்று மிகவும் அதிக ஒளியுடன் எரியும். பின்னர் மேற்புற வேகத்தாலும் உள்ளே உள்ள அழுத்தத்தாலும் வெடித்துச் சிதறும். இது, பார்க்க வான வேடிக்கையைப் போலவே தோன்றும். அதன் பின்னர் தீ எரியாமல் அமைதியாகும். அப்போது அதன் பெயர் வெள்ளைக் குள்ளன். அந்த விண்மீன் சாம்பலாகி பொடிப்பொடியாய் அண்டவெளியில் கலக்கும். விண்மீன் இல்லாமற்போன அந்த இடம் கருந்துளை எனப்படும். கருங்குள்ளர் என்றும் இதை அழைக்கலாம். இதுவரை மூன்று சூப்பர் நோவாக்களை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். முதலில் இப்படி பதிவு செய்யப்பட்டது சீனாவில் 1054ஆம் ஆண்டில் தான்.

பிறகு பேசுவோம் குழந்தைகளே!
Pin It