பாபா பிளாக்ஷிப்

வா! வா! செம்மறி
இருக்கிறதா கம்பளி?
ஆம்! ஆம்! அய்யா!
முதுகில் மூன்று மூட்டைகள்
ஒன்று எசமானுக்கு
ஒன்று எசமானிக்கு
ஒன்று தோப்பில் அழுகிற
சின்னச் செல்லப் பிள்ளைக்கு!

புஸ்ஸி கேட்....

பூனையாரே! பூனையாரே!
எங்கே போனீங்க?
லண்டனுக்கு ராணியைத்தான்
பார்க்கப் போனேங்க
போன இடத்தில் பூனையாரே
என்ன செய்தீங்க?
அரியாசனம் அடியில் இருந்த
எலியைக் கொன்னேங்க!

ட்விங்கிள் ட்விங்கிள்...

மின்னும் மீனே! மின்னும் மீனே!
எப்படி உன்னை வியப்பேன் நானே!
பூமியின் மேலே வெகு உயரத்தில்
வைரம் போலே ஒளிர்கின்றாயே!

நரசிம்மன்,
தாவரவியல் பேராசிரியர், சென்னை கிறித்துவக் கல்லூரி
Pin It