சாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்
விலை ரூ.100

‘இந்தப் போராட்டத்தில் பங்கேற்று மாண்டுபோன தோழரின் இல்லத்திற்கு ஆறுதல் கூற மணியம்மையார் சென்றிருந்தபொழுது, அவருடைய துணைவியார் கூறினார் : ‘என் கணவர் இறந்து போனதைப் பற்றி கவலைப்படவில்லை! சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்திற்குத்தானே இறந்து போனார்! தலைவரிடம் கூறுங்கள்! அடுத்த கிளர்ச்சியை நடத்தச் சொல்லுங்கள்! அந்தக் கிளர்ச்சிக்கு என் மகனை அனுப்பி வைக்கிறேன்! நானும் வருகிறேன்!’

ஆசிரியர் : திருச்சி செல்வேந்திரன், பக்கங்கள் : 376
வெளியீடு : பெரியார் திராவிடர் கழகம், கோவை மாவட்டம். பேசி : 94421 28792


மீண்டும் சுதந்திரப்போர்
விலை ரூ.50

‘இந்த ஆண்டு இறுதிக்குள் 25 கோடி செல்போன்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நீங்கள் 224 ரூபாய்க்கு கார்டு வாங்கினால் 200 ரூபாய்க்கு பேசலாம். மீதி 24 ரூபாய் என்ன ஆனது? அதுதான் சார் உங்களை அறியாமலேயே உங்கள் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் சேவை வரி. இப்படி தொலைத் தொடர்புகளிலிருந்து மட்டும் சாதாரண நடுத்தர மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை சேவை வரி என்று பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.’

ஆசிரியர் : சோலை பக்கங்கள் : 160
வெளியீடு : தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, ராயப்பேட்டை,
சென்னை 14. பேசி : 044 65484699


தேடல்
விலை ரூ.75

‘மனுவில் பங்குப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர். கன்னியர் இல்லங்களின் தலைமைச் சகோதரிகளும் பங்குப் பேரவையில் இடம் பெற்றிருந்தனர். இவர்களும் தங்களது பகிர்வில், பிரிவினை – சாதியின் அடிப்படையிலேயே அமைந்ததாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினர். ஆனால், இவர்கள் இருவரும் மனுவில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். சாதியின் அடிப்படையில் பிரிவினை இருக்கிறது என்று கூறிய இவர்கள், அதை எதிர்க்கும் மனுவில் கையெழுத்திடவில்லை என்பதால், அவர்கள் சாதிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்று நான் எண்ணினேன்.’

ஆசிரியர் : மாற்கு, பக்கங்கள் : 294
வெளியீடு : வைகறைப் பதிப்பகம், பெஸ்கி கல்லூரி, திண்டுக்கல் 624 001

கேள்விகளும் புத்தரும்
விலை ரூ.25

‘பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட கர்ம விதிதான், சமூகத்தில் புரட்சி உணர்வை முழுமையாகக் கிள்ளியெறியத் திட்டமிடப்பட்டதாகும். ‘மனிதனின் துன்பத்திற்கு அவனையன்றி வேறெவரும் பொறுப்பில்லை. துன்ப நிலையைப் புரட்சியால் மாற்ற முடியாது. ஏனெனில் ஒருவனுக்கு இப்பிறவியில் ஏற்படும் துன்பம், கடந்த பிறவியில் அவன் புரிந்த கர்மங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன' என்கின்ற இந்த கர்ம விதிதான்! பார்ப்பனியத்தால் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சூத்திரர்கள், பெண்கள் ஆகிய இரு வகுப்பாரும் இதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடியவில்லை.’

ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்
பக்கங்கள் : 64 வெளியீடு : ‘துடி பாலம்',
இ/7, பாரத் அடுக்ககம், ஆர்.வி. நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை 600 102


அடக்கம், மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள்
விலை ரூ.75

‘போர், பட்டினியை உருவாக்குகின்றன. ஆனால், பட்டினியும் போருக்கு வழி வகுக்கும். பட்டினியும், அமைதியும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. அதாவது பட்டினி ஆட்சி செய்யும் பொழுது அமைதி இருக்க முடியாது. இந்த சவால்களை சமாளிக்கும் வகையில், சமூகத்தில் நம்பிக்கையை நிலைபெறச் செய்ய எல்லா ஜனநாயக நிறுவனங்களுக்கும் மாபெரும் பொறுப்பும், கடமையும் உள்ளன.’

ஆசிரியர் : சிவராஜ் வி. பாட்டீல் பக்கங்கள் : 200
வெளியீடு : சோக்கோ அறக்கட்டளை, 143, லேக் வியூ சாலை, கே.கே. நகர்,
மதுரை 20 பேசி : 0452 2583962


சச்சார் குழு அறிக்கை
நன்கொடை ரூ.70

‘சச்சார் அறிக்கை என்பது ஏதோ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மட்டுமேயான ஒரு பரிந்துரை என்பது போல இங்கு சிலரால் முன் வைக்கப்படுகிறது. சமூக பொருளாதார கல்வி நிலை என்கிற எல்லா அம்சங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள இந்திய முஸ்லிம்களை மேம்படுத்தி, பிற சமூகப் பிரிவினருக்கு இணையாகக் கொண்டு வருவதற்கு இடஒதுக்கீடு என்பது பல்வேறு வழிமுறைகளில் ஒன்று மட்டுமே. சச்சார் குழுவின் பரிந்துரைகள் மிகவும் விரிந்த தளத்தில் இயங்குவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.’

ஆசிரியர் : அ. மார்க்ஸ், எதிர் வெளியீடு, 305, காவல் நிலையம் சாலை,
பொள்ளாச்சி-1
பேசி : 04259 226012
Pin It