பண்டிதரின் கொடை
விலை ரூ.25

‘‘இந்த சாதி இந்து சமூகம் முற்போக்காய் இருந்தாலும், சனாதனமாய் இருந்தாலும் - தலித் மக்கள் வரலாற்று விசயத்தில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்திய துணைக்கண்ட வரலாற்றில் விகிதாச்சார உரிமை என்றும், இடஒதுக்கீடு கொள்கை என்றும், சமூக நீதி என்றும் அழைக்கப்படுவதின் அத்தனைப் பரிமாணங்களின் அடிப்படையையும் - ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வகுத்து, இந்த சமூகத்திற்கு பண்டிதர் அளித்தார் எனில், அதைக் கொடை என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது.''

ஆசிரியர் : கவுதம சன்னா - பக்கங்கள் : 78
வெளியீடு : சங்கம், 7ஏ, மூன்றாவது தளம், சுங்குராமன் தெரு, சென்னை 600 101 பேசி : 98412 - 08499


பெயல் மணக்கும் பொழுது
விலை ரூ.130

‘‘கோபமும் ஆவசேமும் மட்டும் ஈழப் பெண்களுக்கு விட்டுவைக்கப்படவில்லை. போர்க்காலம் தந்த நெருக்கடியில் பறிபோன இடங்கள், காட்சிகள், நினைவுகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் அவலக் கடமையை ஏற்ற கவிஞர்கள் ‘காலைச் செம்மையை ரசிப்பதை' ‘மறந்து நேற்று வரையும் அமைதியான காலைப்பொழுது' என்ற கோர உண்மையை உலகுக்கு அறிவிக்க வேண்டியவரானார்கள். பறிபோன காலத்துக்கு சாட்சி சொல்ல நேர்ந்த அவர்களுக்கு, வேறொரு பணியும் காத்திருந்தது. போர் தொலைத்த, பாதித்த, காத்திருக்கச் செய்த உறவுகளின் உன்னதத்தை மட்டுமின்றி, அவற்றின் நிலையற்ற தன்மையையும் இவர்கள் எழுத வந்தனர்.''

தொகுப்பு : அ. மங்கை - பக்கங்கள் : 280
வெளியீடு : மாற்று, 1, இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, சூளைமேடு, சென்னை 94
பேசி : 93828 - 53646


அவுரி
விலை ரூ.200

‘‘மவனே உன்ன வெட்டாம விட மாட்டேன்லே. ப(ø)றச்சின்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா போச்சு. பத்து ரூபாய்க்கு பாவாடையைத் தூக்குவாளா? அதுவும் எம் பொண்டாட்டிக் கிட்டையா வந்து சொல்லுற. உன்ன வெட்டி தாழிச்சாதாடா, எம் மனசு ஆறும்'' அரிசன முத்துவின் சத்தம் கத்தலாகக் கேட்டது. ஆட்கள் அவன் பக்கத்தில் போக பயந்தார்கள். சின்னக் கடை சந்தி ஜே.ஜே. என்று இருந்தது. யாரோ போலிஸ் வருவதாகச் சொன்னார்கள். அவ்வளவுதான். அரிசன முத்து உஷாரானான். அரிவாளை எஸ்.ஆர். கோட்டைக்குள் விட்டெறிந்தான்.''

ஆசிரியர் : சிறீதர கணேசன்
பக்கங்கள் : 400
வெளியீடு : காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24
பேசி : 044 23726882


திருநீறு - ஓம் - நாமம் ஏன்? எதற்காக?
விலை ரூ.3

‘‘நெற்றியில் செங்குத்தாக இரண்டு வெள்ளைக் கோடுகள், இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடு - இதுதான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக் கோடு சிருஷ்டி தத்துவத்தைக் குறிக்கும் (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையில் தொங்கும் உறுப்பு - ஆண்குறி).''

பக்கங்கள் : 36
வெளியீடு : திராவிடர் கழகம், பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 600 007
பேசி : 044 26618163உள்ஒதுக்கீடு - சில பார்வைகள்
விலை ரூ.40

‘‘நாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு. வகுப்புவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோரிக்கையாய் இருந்திராது.''

ஆசிரியர் : ம. மதிவண்ணன்
பக்கங்கள் : 66
வெளியீடு : கருப்புப் பிரதிகள், பி74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை 5
பேசி : 94442 - 72500


நவீன இந்திய சமூகத்தில் சிறுபான்மையினர்
விலை ரூ.5

‘‘மத நம்பிக்கைகள் மிகுந்த ஒரு சமுதாயத்தில், பல கூறுகள் உள்ள ஒரு சமுதாயத்தில், நவீனப்படுத்தாத முதலாளித்துவ வழியில் சென்று கொண்டிருக்கும் இந்திய சமுதாயத்தில் - இஸ்லாமியர்களின் அடையாளம், பாதுகாப்பு, சம உரிமை ஆகிய மூன்றும் அதிமுக்கியத்துவம் பெறுகின்றன என்பதை சச்சார் கமிட்டி குறிப்பிடுகிறது.''

ஆசிரியர் : கே.என். பணிக்கர்
பக்கங்கள் : 32
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை 600 018
பேசி : 044 24332424
Pin It