ஆப்பிரிக்கக் கனவு
விலை ரூ.200

"இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளர்களில் ஒருவரான சேகுவேராவின் வாழ்விலும் பணியிலும் விட்டுப்போன கண்ணிதான் இந்த நூல். இதன் வாயிலாக, புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற சேகுவேராவின் வேட்கை, ஆழமான மனிதநேயமாக மாறுவதையும் அதன் தொடர்ச்சியாக உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, அவர் ஆயுதமேந்திப் போராடுவதையும் நாம் விரிவாக அறிய முடியும்.''

ஆசிரியர் : எர்னஸ்டோ சேகுவேரா
பக்கங்கள் : 400
வெளியீடு : விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர்,
மசக்காளிபாளையம் (வடக்கு),
கோயம்புத்தூர் - 641 015
பேசி : 0422 2576772சனநாயகமற்ற சனநாயகம்
விலை ரூ.50

"விரும்பிய தொழிலைத் தேர்ந்து கொள்ளும் சுதந்திரத்தை சாதி அமைப்பு மறுக்கிறது. இந்துக்களின் திருவிழாக்கள், சடங்குகள் முதலியவற்றில் சுகாதாரமற்ற வேலைகளைச் செய்ய தலித்துகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். திணிக்கப்பட்ட இந்த இழிதொழில்களையே இம்மக்களின் வாழ்முறை, மரபு, பண்பாடு என்று இந்து சமூகம் நியாயப்படுத்துகிறது. அதே போல வெட்டியான், வண்ணான், பறை அடித்தல் போன்ற சித்தரிப்புகளைச் சாதியக்கறை நீங்காமல் பாடநூல்களும், திரைப்படங்களும் பாதுகாத்து வருகின்றன. தலித் இயக்கங்களின் செயல்பாடுகள், இழிதொழில்களை மறுத்தே வந்துள்ளன.''

ஆசிரியர் : ஸ்டாலின் ராஜாங்கம்
பக்கங்கள் : 128
வெளியீடு : கவின் நண்பர்கள்,
ஆர்.சி. நடுத்தெரு,
வ.புதுப்பட்டி - 626 116
பேசி : 99940 61508


பழியற்ற ஏமாற்றுப் பொருளாதாரம்
விலை ரூ.20

"சந்தைப் பொருளாதாரம்' என்று உயர்வாக அழைக்கப்பட்டாலும் கேடுவிளைவிக்கும் முதலாளித்துவத்தின் பொது குணாம்சங்களான, பாகுபாடு, பணம் தேடும் வெறி, செல்வத்தைக் குவிக்க பங்குச் சந்தை சூதாட்ட வழி, சமூக அக்கறையற்ற பொருள் உற்பத்தி, இயற்கையைப் பேணும் உணர்வற்ற சுயநலம், வறுமை, யுத்தம் ஆகியவற்றை விளைவிக்கும் உற்பத்தி உறவு இவை எதுவும் ஒழிக்கப்படவில்லை; மாறாக காதுக்கினிய சொல்லாடல் மூலம் மறைக்கப்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல். ''

ஆசிரியர் : ஜான் கென்னத் கால்ப்ரெய்த்
பக்கங்கள் : 56
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
25, தெற்கு சிவன் கோயில் தெரு,
சென்னை - 24
பேசி : 044 - 24815474


மேலப்பாளையம் முஸ்லிம்கள்
விலை ரூ.40

"மேலப்பாளையத்தினுள் சென்று களப்பணியில் ஈடுபடும்பொழுதுதான் - அம்மக்களுக்கு அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் இழைத்துள்ள அநீதியை அறிய முடிந்தது. காவல் துறையின் அத்துமீறல்கள் இளைய தலைமுறையினரை சீரழித்துக் கொண்டிருந்ததை நேரடியாக அறிய முடிந்தது. இக்கொடுமைகள் குறித்த தகவல்கள் வெளியுலகை எட்டி, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் கட்டமைத்துள்ள மாயை சிறிது விலகினாலும், அதுவே இந்நூலின் பெரிய வெற்றியாக அமையும்.''

ஆசிரியர் : பே. சாந்தி
பக்கங்கள் : 88
வெளியீடு : யாதுமாகி பதிப்பகம்,
37/17, ராமசாமி கோயில்
சன்னதி தெரு,
திருநெல்வேலி - 627 002
பேசி : 0462 - 4000285கடவுள் கற்பனையே : புரட்சிகர மனித வரலாறு
விலை ரூ.35

"ஒரு கம்யூனிஸ்டாக இருப்பவன் (அவன் மார்க்சிய வாதியாக இருக்கும் பட்சத்தில்) மூடப்பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கும் வளர்ச்சியடையாத மக்கள் மனதில் அறிவுப்பூர்வமான ஆர்வத்தை மத விஷயங்களில் தூண்டி, விஞ்ஞானப் பூர்வமாக விமர்சனம் செய்து, மதத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கப் பாடுபட வேண்டும். இல்லையெனில், மார்க்சியவாதி என்ற பெயரில் மார்க்சியத்தை கொச்சைப்படுத்துபவனாகத்தான் ஒரு கம்யூனிஸ்ட் இருக்க முடியும்.'' - லெனின்

ஆசிரியர் : ஏ.எஸ்.கே.
பக்கங்கள் : 135
வெளியீடு: சூலூர் வெளியீடு,
8, பால இல்லம்,
நஞ்சப்பா குடியமைப்பு,
சூலூர்,
கோவை - 641 402மனசு சுற்றிய மாவளி
விலை ரூ.50

"ஆயிரம் சாமிகள் அலமாரியில்/முன்னறி தெய்வங்கள்/முதியோர் இல்லங்களில்; வன்முறையைக் காட்டிலும் கொடுமையானது/காந்தியின் அகிம்சை/அம்பேத்கரின் அனுபவத்தில்; முப்பத்தேழு ஆண்டுகால/வேலை அனுபவத்தை/பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்/ஓய்வுபெற்ற ஆசிரியர்/எழுதப்படிக்கத் தெரியாத/தன் மனைவியிடம்; கொலைக் குற்றத்தில் கைதானார்/குடியரசுத் தலைவரையே/ தரையில் குந்த வைத்த ஆசாமி. ''

ஆசிரியர் : பாவலர் வையவன்
பக்கங்கள் : 96
வெளியீடு : தமிழ் குடியரசு பதிப்பகம்,
14/12, மியான் முதல் தெரு,
சேப்பாக்கம்,
சென்னை - 5
பேசி : 94443 21902
Pin It