Rajiniஉழைப்பின் ஈரம்காயா
வடுக்கள் நெளியும் கைகள்
கிளம்புகின்றன
உழைத்து வாங்கிய கூலியோடு
கதாநாயகர்களின்
உயர்ந்த உருவங்களின் மீது பாலூற்ற

நட்சத்திர போதை தலைக்கேற
கிறங்கடிக்கும் ரசிகனின் அறிவீனத்தில்
உயர்கிறது நடிகனின் அந்தஸ்து

சிறந்த எழுத்தாளன்
சிறந்த விஞ்ஞானி
சிறந்த இயக்கவாதி என்றில்லை
சிறந்த நடிகன் போதும்
நாட்டரசியலுக்கு

திரையரங்க இருள்வெளியில்
தொலைக்கப்படுகின்றன விழிகள்
கூத்தாடிகளைக் கும்பிடும்
கைகளாகி பலியாகின்றது அறிவு

கிடா வெட்டி
கற்பூரம் கொளுத்தி
திரையில் காசு வீசி
தன் உழைப்பை அவனுக்கு
கறுப்புப் பணமாக்கி
வெளியேறுகிறான் ரசிகன்

"உடல் மண்ணுக்கு
உயிர் ரஜினிக்கு''

அப்ப உங்க ஆத்தாவுக்கு?
Pin It