ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
விலை ரூ.150

“மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவுக்காவது உயர்த்துவதன் மூலம் சமூக கொந்தளிப்புகளை தள்ளிப்போடுவதுதான் உலக வங்கி போன்றவை நமக்கு கடன் கொடுப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ற வாதத்திற்கு, இந்நூல் பதிலடி தருகிறது. லாபவெறியைத் தவிர இந்த நிறுவனங்களுக்கு வேறு எதிலும் அக்கறை இல்லை. புரட்சிகளை தள்ளிப் போடுவதற்குக்கூட, மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கம் இந்நிறுவனங்களுக்கு கடுகளவும் இல்லை.''

ஆசிரியர் : ஜான் பெர்க்கின்ஸ்,
பக்கங்கள் : 318,
வெளியீடு : விடியல்,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம்,
கோவை 641 015
தொலைபேசி : 0422 2576772அறிவியலா? அருஞ்செயலா?
விலை ரூ.60

“அறியாமையும் வறுமையும் நம் சமூகத்தோடு இன்றளவும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. அவற்றை ஒழிக்கப் பாடுபடுவதே இன்றைய தேவை! வறுமை உருவாகக் காரணமான சுரண்டல்காரர்களும், சமூக விரோதிகளும் அறியாமையை நிலைநிறுத்த, அச்சத்தை உருவாக்க பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள். அச்சமில்லாத இடத்தில்தான் அறிவு இயல்பாக செயல்படும். அத்தகைய அச்சமற்ற மனிதர்கள் உருவாகும் சூழலை, இந்நூல் உருவாக்கும்.''

ஆசிரியர் : பி. பிரேமானந்து
பக்கங்கள் : 216,
வெளியீடு : சூலூர் வெளியீட்டகம்,
8, பால இல்லம், நஞ்சப்பா குடியமைப்பு, சூலூர்,
கோவை 641 402


பெண் ஏன் அடிமையானாள்?
விலை ரூ.15

“ஆண்மை என்ற பதம் உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை. உலகத்தில் "ஆண்மை' நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்படாதவரை, பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால்தான் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்குதான் உண்டென்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.''

ஆசிரியர் : தந்தை பெரியார்,
பக்கங்கள் : 64,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை 600 018
தொலைபேசி: 044 2433 2924


தெய்வம் என்பதோர்...
விலை ரூ.50

“1834இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னோடியாகத் தொடங்கிய சென்னை உயர்நிலைப் பள்ளியில் 1855 வரை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு அனுமதி இல்லை. 1851இல் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அனுமதித்ததால், பல்கலைக்கழக மேலாண்மைக் குழுவிலிருந்து ஒரு "இந்து' உறுப்பினர் பதவி விலகினார். 1855 வரை இந்தப் பள்ளியிலிருந்து தகுதி காண் பட்டயம் பெற்ற 36 பேரில் 20 பேர் பார்ப்பனர்களே என்றும் 1859இல் ஆங்கிலேய அரசு முதன்முறையாகத் தேர்ந்தெடுத்த துணை ஆட்சியர் 40 பேரில் இந்தப் பள்ளியில் பயின்ற பார்ப்பனர்களே பெருந்தொகையினர்.''

ஆசிரியர் : தொ. பரமசிவன்,
பக்கங்கள் : 112,
வெளியீடு : யாதுமாகி பதிப்பகம்,
37/17, ராமசாமி கோயில் சன்னதி தெரு,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
தொலைபேசி: 0462 4000285ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
விலை ரூ.45

“பெரும்பாலான வீடுகளில் டி.வி. பார்க்கும் அறை, நல்ல விசாலமாகவும், சமையல் அறை விதிவிலக்கின்றி இத்துணூண்டாகவும் இருப்பதைப் பார்க்கலாம். அது பெண்ணின் சேரிதானே. ஆண்கள் போய் அதில் இருக்கப் போவதில்லையே. ஆகவேதான் காற்றோட்டமில்லாத சின்ன அறையாக சமையலறைகள் அமைகின்றன. என்ன பெருந்தன்மையான மனசய்யா.''

ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்,
பக்கங்கள் : 108,
வெளியீடு : வாசல்,
40டி/4, முதல் தெரு, வசந்த நகர்,
மதுரை 625 003,
தொலைபேசி: 98421 02133அப்சல் வழக்கு உண்மைகள்
நன்கொடை ரூ.20

“அப்சலுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பவர்கள், "தேசத் துரோகிகள்' என்றும், "பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்' என்றும் அவதூறு செய்யப்படுகிறது. எனவே, இது ஒரு மனித உரிமைப் பிரச்சனை என்னும் அடிப்படையிலும், சட்டம், நீதி பரிபாலனம் ஆகியவற்றின் அடிப்படையிலும், இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையிலும், மக்கள் மன்றத்தில் சில உண்மைகளை எடுத்துரைப்பது நமது கடமையாகின்றது.''

வெளியீடு : மரண தண்டனைக்கு எதிரான இயக்கம்,
10, தாமஸ் நகர்,
சென்னை 600 015
தொலைபேசி: 044 22353503
Pin It