அரசு தொகுப்பு வீடு
நாற் சட்டங்களுக்குள் அப்பா
அப்பாவின் அழைப்பினை
மறுக்கவியலாது காத்திருக்கும்
அம்மாவின் ஆசையால்
நடந்தது என் திருமணம்
வயசுக்கு வராத தங்கைகள்
வயசுக்கு வந்த தம்பி
மூன்று நாட்கள் தள்ளிப்போன
முதல் இரவு
நான்காம் நாளின் நள்ளிரவில்
நானும் என்னவளும்
மொட்டை மாடியில்
நிலா வெளிச்சத்தினை
மறைத்து இருள் கொடுத்தது
பக்கத்து வீட்டு தென்னங்கீற்று
வறுமை மறந்து
நடந்தேறியது தாம்பத்தியம்
புரிந்தது எனக்கு
தென்னை நட்டால்
பிள்ளையும் கிடைக்கும் என்று

- மணிசரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It