* காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் 24 இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படுகிறது. - செய்தி
அப்படியே, ஆகமங்கள் ஒழுங்கா பின்பற்றப்படுதான்னு கண்காணிக்கிற காமிராவப் பாத்து வாங்குங்க!

* திருமலையில் முகூர்த்த நாள்களில் இனி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். - திருப்பதி தேவஸ்தானம் தகவல்
ஜாதி மறுப்பு திருமணத்துக்கு அனுமதி உண்டா? ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா? கேட்டு சொல்லுங்க...

* ‘ஆன்மிக குரு’ காஞ்சி ஜெயேந்திரர் பிறந்த நாள் விழாவில் அமித்ஷா, சு.சாமி, பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டு. - செய்தி
அப்படியே, ‘சாமி’களுக்கு ஒரு பிரச்சார வாகனத்தைத் தயார் செஞ்சு, 234 தொகுதி களுக்கும் அனுப்பி வைய்யுங்க! நல்லா ஓட்டு விழும்!

* வேட்பாளர் பட்டியல் - தேர்தல் அறிக்கைகளை வெளியிட ‘வளர்பிறை’ தொடங்கும் ஏப்.7ஆம் தேதிக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. - செய்தி
சந்திர மண்டலத்துலயும், தேர்தல் அறிவிச்சிருக்காங்களா? சொல்லவே இல்ல!

* ஏழுமலையான் ‘பட்ஜெட்’டில் கணக்கில் வராத ரூ.43 கோடி. - செய்தி
பகவானுக்கு ‘நெற்றி நாமம்’ போட்ட வகையிலான செலவுன்னு எழுதி சரிகட்டிடுங்க!

* ‘தீ மிதி’க்கு தடைபோட கருநாடக அரசு ஆலோசனை. - செய்தி
அப்படியே செஞ்சுடுங்க; பக்தர்கள் வேணும்னா ‘ஆன்லைன்’ வழியா அக்னிகுண்டம் வச்சு ‘ஷேர்’ பண்ணிக்கலாம்!

தீ மிதிக்கு தடை - கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு

கருநாடகாவில் தும்கூரு என்ற ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் தீ மிதியின்போது தீயில் விழுந்து 70 பக்தர்கள் படுகாயமடைந்தனர். 35 வயதான பெண் தீக்காயங்களால் கடந்த மார்ச் 17ஆம் தேதி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கருநாடக சட்டசபையில் தீக்குண்டத்துக்கு உரிய பாதுகாப்புகள் செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அப்போது சீரிய பகுத்தறிவாளரான கருநாடக முதல்வர் சித்தராமய்யா, ‘தீ மிதி நடத்த முழுமையாக தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று சட்டசபையில் தெரிவித்தார். பாராட்ட வேண்டிய முதலமைச்சர்!

Pin It