திருப்பூர் இராயபுரம் பகுதியிலுள்ள புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு துரோணாச்சாரி நினைவாக ‘துரோணா’ என்று பெயர் சூட்டப்பட் டுள்ளதற்கு ஊர் மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏகலைவன் என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். துரோணாச்சாரி உருவம்போல் பொம்மை செய்து குருவாகக் கருதி வில்வித்தை கற்றார் என்பதற்காக அவரது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார் துரோணாச்சாரி என்று மகாபாரதம் கூறுகிறது. ‘சூத்திரன்’, அவர் ‘குலதர்மத்துக்கு’ எதிராக வில்வித்தை கற்கக் கூடாது என்பது இதன் தத்துவம்.

triphur school 600‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் மாநகராட்சிப் பள்ளிக்கு ‘துரோணாச்சாரி’ பெயர் சூட்டுவது பச்சை வர்ணாஸ்ரம வெறிப்போக்காகும். இந்தப் பெயரை நீக்கக் கோரி, இராயபுரம் பகுதி மக்கள் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர். 

இந்தக் குழுவில் கழகப் பொருளாளர் சு. துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் த.பெ.தி.க., ம.தி.மு.க., பு.இ.ம., தி.மு.க. அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் இடம் பெற்றுள்ளனர்.  முதல் கட்டமாக ‘துரோணா’ என்ற பெயரை நீக்கி ‘மாநகராட்சி நடுநிலைப் பள்ளி’ என்ற பெயரையே மீண்டும் சூட்டக் கோரி ஜூன் 24 அன்று, மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்வியாளர், தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Pin It