தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கப் போகிறது.

ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டதை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் பொறுப்பில்லாமல் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 20 மாத கால ஆட்சி திமுக அறிவித்த திட்டங்கள் எந்தளவுக்கு செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்பது குறித்து கள ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்.

மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்ததுள்ளனவா? என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

வெளிப்படையான நிர்வாகம் என்பது இதுவரை பேசப்பட்டுத்தான் வந்தது. ஆனால் அத்தகைய நிர்வாகம் என்ன என்பது பற்றி மக்களுக்குத் தெரியாது. இப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் நாம் நேரடியாக பார்க்க முடிகிறது.

இது தவிர தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதி உங்கள் தொகுதியில் நிறைவேற்றப்படாத முன்னுரிமை பெறக்கூடிய திட்டங்கள் எவை என்று கேட்டுள்ளார்.

அந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அடுத்த இலக்கை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தவிர மாநிலத் திட்டக் குழு அவ்வப்போது அரசின் செயல்பாடுகளை ஆராய்ந்து அரசிடம் அறிக்கைகளை வழங்கிக் கொண்டு வருகிறது.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் போன்றவை குறித்த நிறை குறைகளை ஆராய்ந்து முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கடந்த கால ஆட்சியில் இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் பார்க்க முடியாத ஒன்று. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்து செயல்படுத்தாது அறிவிப்புகளோடு முடங்கிப் போயின.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது புதிய திட்டங்களை அறிவிப்பார்கள். அடுத்த ஆண்டு அத்திட்டங்களின் நிலை என்ன? அது நிறைவேற்றப்பட்டதா? நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டதா? எப்படி எந்த ஒரு நடவடிக்கையும கடந்த ஆட்சியில் நடைபெற்றது இல்லை.

ஆனால் அதற்கு மாறாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றனவா? செயல் வடிவம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பதை பற்றி எல்லாம் மதிப்பீடு செய்து அதை முடித்து விடுவதற்கான transparent governance இப்போது தான் நடந்து கொண்டிருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It