• சசிகலா வரவேற்பு; சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற அமைச்சர்கள் காவல்துறை இயக்குனரிடம் மனு. - செய்தி
அடுத்து காவல்துறை இயக்குனர் ‘கான்ஸ்டபிளை’ நேரில் சந்தித்து ‘சல்யூட்’ அடித்து, மனு கொடுப்பார் போல!
• ரூ.250 கட்டினால் பழனி கோயில் பிரசாதம் அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும். - அறநிலையத் துறை அமைச்சர்
பக்தியை இப்படியே அமேசான் ‘ஆன் லைன்’ சேவைகளாக்கி விட்டால், கோயில்களையே இழுத்து மூடி விடலாம்! சபாஷ்! பகுத்தறிவு பக்திக்குள்ளும் நுழைஞ்சுட்டுதே!
• 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் முடிவு எடுப்பார். - தமிழக ஆளுநர்
அதாவது, ‘எந்த முடிவும் எடுக்க மாட்டேன்’ என்ற முடிவை எடுப்பார்; அப்படித் தானே! நல்ல முடிவு!
• கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைக் குழியில் மனிதக் கழிவுகளை அகற்றும்போது 340 பேர் உயிரிழந்துள்ளனர். - செய்தி
அதனால் என்ன? ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்கு எதிராக தீவிரவாதிகள் சதின்னு அறிவிச்சுடலாம்!
• போராடும் விவசாயிகளுடன் பேசத் தயார். - மோடி
அடேங்கப்பா... விவசாயிகள் போராட்டம் நடக்குதுன்னு, பிரதமர் தெரிஞ்சு வச்சிருக்காரே! கெட்டிக்கார மனிதர்!
- விடுதலை இராசேந்திரன்