அடையாள மீட்பு
விலை ரூ.75


book

‘‘அய்ரோப்பிய, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய காலனியம், அமெரிக்க ஏகாதிபத்தியம், உள்நாட்டு நவகாலனிய ஆட்சி அதிகாரம் ஆகியவை, ஆப்பிரிக்க நாடுகளை அலைக்கழித்து வருகின்றன. ஆப்பிரிக்க மக்களின் மொழி, கலை மற்றும் பண்பாடு ஆகியன காலனிய ஆதிக்கத்தால் சீரழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிரான போராட்டம், ஆப்பிரிக்க மொழி அரங்கம், புனைகதை ஆகியவற்றில் எதிர்கொள்ளப் பட்டதை இந்நூல் விவாதிக்கிறது.''

ஆசிரியர் : கூகி வா தியாங்கோ வெளியீடு : வல்லினம்
9, ‘ஒய்' பிளாக், அரசு குடியிருப்பு, லாசுப்பேட்டை,
புதுவை 605 008 பக்கங்கள் : 146தலித் வாழ்வியல் போர்!
விலை ரூ.5

Book ‘‘தலித்துகளின் மண்ணுரிமையைப் பறித்து வாழ்வுரிமையை மறுத்து வரும் ஆதிக்க சாதி ஆளும் வகுப்பினர்தான் இன்று நாட்டையே அந்நியரிடம் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உலகமயம் என்ற தேன் தடவிய நஞ்சை நாட்டு மக்களுக்கு கொடுத்து, அந்நிய மூலதன இறக்குமதி என்ற பெயரில் அடிமைச் சாசனத்தில் அன்றாடம் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலித்துகளுக்கு நில உரிமை என்பது, தலித்துகளுக்கு தனியுரிமை கோரும் பிரச்சினை மட்டுமல்ல. நாட்டையே பாதுகாக்கும் தேசிய அரசுரிமைப் போராட்டத்தின் அங்கமாகவும் அது பரிசீலிக்கப்பட வேண்டும்.''

வெளியீடு : தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ் நாடு புதுவை,
9, பாலசுப்பிரமணியன் லே அவுட், ஈ.பி. காலனி, மகாராஜபுரம், விழுப்புரம் பக்கங்கள் : 48

வாஸ்து சாஸ்திரம் வளம் தருமா?
விலை ரூ.15

Book ‘‘நினைக்கவே நெஞ்சு கொதிக்கும் சாதி இழிவுகளை நியாயப்படுத்துகிறது வாஸ்து சாஸ்திரம். மனித சமத்துவத்தைக் காலில் மிதிக்கக் காத்திருக்கும் வர்ணாசிரம வெறிக்கூட்டம் ‘வாஸ்து ... வாஸ்து' எனக் கூவி விற்கத் தொடங்கிவிட்டது. வீடுகட்டும் வழியைக் கேட்டால் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் எனத் தனித்தனியாய்ப் பிரித்து வைத்துத் தலையைத் தடவத் தொடங்குகிறது வாஸ்து.''

ஆசிரியர் : சூ.ர. தங்கவேலு வெளியீடு : சூலூர் அறிவு நெறி, ‘வள்ளுவர் இல்லம்', ஏ.கே. ராமசாமி நகர், சூலூர், கோவை 641 402 பக்கங்கள் : 56

தமிழீழத் தமிழரை, இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பேசுங்கள்
விலை ரூ.120

Book ‘‘தமிழீழத்தை தமிழீழத் தமிழரை நேரில் பார்த்திட வேண்டும். அங்குள்ள உண்மையான நிலைமைகளைப் புரிந்திட வேண்டும் என்கிற ஒரே நோக்குடன், தமிழீழப் பகுதிக்குச் சென்றேன். உண்மையில், சட்டப்படி என்று இல்லாவிட்டாலும், நடப்பின்படி, தமிழீழத்தின் ஒரு பகுதியில் விடுதலைப் புலிகள் ஆட்சி, அவர்கள் இயற்றிக் கொண்ட சட்டப்படி இன்று நடக்கிறது. அமைதியாக நடக்கிறது. இது உண்மை. ''

ஆசிரியர் : வே. ஆனைத்து வெளியீடு : பெரியார் நூல் வெளியீட்டகம், 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 5 பக்கங்கள் : 256

எல். இளையபெருமாள்
வாழ்க்கை வரலாறு
விலை ரூ.15

Book ‘‘திரு. எல். இளையபெருமாள் போன்ற சேரிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்வதும், அவர்களின் போராட்ட நாட்களையும், சாதி வெறியர்களை எதிர்த்த முறைகளையும் உள்வாங்கிக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதமாக்குவோம். ஒடுக்கப்பட்ட சேரி மக்களின் விடுதலையை எவரிடம் இருந்தும் நாம் எதிர்பார்க்க முடியாது.''

ஆசிரியர் : பூவிழியன் வெளியீடு : கொதிப்பு, 1எ, மணத்திடல் தெரு, சீர்காழி - 609 110. பக்கங்கள் : 48


Pin It