கீற்றில் தேட...

 

அமெரிக்க அதிரடிப்படையால் உஸாமா பின்லாதின் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதையொட்டி முதல்வர் கருணாநிதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதை படிக்கும்போது ஒபாமா எழுதிக் கொடுத்த அறிக்கையை இவர் கையெழுத்திட்டு வெளியிட்டு விட்டாரோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு அதில் உள்ள அம்சங்கள் அமைந்துள்ளன.

சின்னஞ்சிறு குழந்தையும் உஸாமா கொல்லப்பட்ட விஷயத்தில் அமெரிக்காவின் கூற்றை சந்தேகம் கொண்டு பார்க்கும் நிலையில், "ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை. ஆம்; 40 நிமிடங்களில் அவரது கதை முடிந்து விட்டது. அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஆணித் தரமாக கூறுகிறார் முதல்வர்.

முதல்வர் ஒருவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து வருமாறு தனது அதிகாரத் திற்குடபட்ட காவல்துறைக்கு உத்தரவிடுகிறார். அந்த காவல்துறை அதிகாரி சிறிது நேரத்தில் முதல்வரிடம் வந்து,

"அய்யா! நீங்கள் சொன்ன அந்த ஆளின் கதையை முடித்து விட்டேன்...'' என்கிறார். உடனே முதல்வர் "எங்கய்யா அந்த ஆளோட புகைப்படம்...'' என்கிறார். அந்த அதிகாரி, "அய்யா! அந்த புகைப்படம் ரொம்ப கோரமாக இருக்குது. அதனால் உங்களிடம் காட்ட மாட்டேன்...'' என்கிறார்.

"எங்கய்யா பிணம்...'' என்று கேட்கிறார் முதல்வர். "அய்யா! அவனது மதப்படி 24 மணி நேரத் துல புதைக்கணும்; அதுனால நான் மெரீனா கடலுக்குள்ள தூக்கி போட்டுட்டேன்...'' என் கிறார்.

இப்படி ஒரு அதிகாரி முதல்வரிடம் சொன் னால், "நீ அந்த ஆளை கொன்றது உண்மை தான்'' என்று முதல்வர் ஏற்றுக் கொள்வாரா? அப் படி ஏற்றுக் கொள்வதுதான் ஆளுமைத் திறனா என்று கேட்கத் தோன்றுகிறது.

மேலும் "சவூதி அரேபிய அரசு தடை விதிக்கவே, சூடா னில் அடைக்கலம் புகுந்தார் பின்லேடன். நைரோபி, கென்யா, தான்சானியா உள்பட பல இடங் களில் உள்ள அமெரிக்கத் தூதர கங்களிலும், அமெரிக்காவிலும் "அல் கய்தா'' அமைப்பு குண்டு வெடிப்பை நடத்தியது.

சூடானில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட பின்லேடன், ஆப் கானிஸ்தானில் தஞ்சமடைந்து, அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப் போர் என அறிவித்தார்...'' என்கிறார் முதல்வர்.

முதல்வரே! உஸாமாவின் வரலாற்றை இன்னும் கொஞ்சம் புரட்டுவது நன்று. உஸாமா ஆப்கான் வந்ததற்கு பிரதான காரணம் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படை களை விரட்டவே என்பதை நீங்கள் அறிய வில்லையா?

சோவியத் படை விரட்டப்பட்ட பின் அங்கே தாலிபான்கள் தலைமையில் ஒரு ஆட்சியை உஸாமா உருவாக்கி நடத்தி வரும் வேளையில், தலிபான்களின் ஆட்சியில் இஸ்லாமிய அடிப்படையிலான சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை கண்ட அமெரிக்கா, எங்கே ஒரு முழுமையான இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சியாக ஆப்கான் அரசு மாறிவிடுமோ என்ற குறுகிய சிந்தனையின் வெளிப்பாடுதான் இரட்டைக் கோபுர தாக்குதலும், அதையொட்டிய ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போரும் என்பதும் முதல்வர் அறியாதது ஆச்சர்யமே.

அடுத்து அமெரிக்காவின் இரட் டைக் கோபுரத் தாக்குதலுக்கு காரணம் உசாமாதான் என்பதற்கான ஆதா ரத்தை அமெரிக்காவே இன்று வரை சமர்ப்பிக்காமல் வெற்று செய்தி களின் மூலம் ஆப்கான் மீது போர் தொடுத்த நிலையில், "நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பின்லேடனின் சதித் திட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது'' என்று திட்டவட்டமாக முதல்வர் கூறுகிறார்.

அமெரிக்க எல்லைக்குள் அந் நிய நாட்டு எறும்பு ஊர்ந்தாலும் அது எங்கள் கண்களுக்கு தெரியாமல் போகாது என மார்தட்டும் அமெரிக்காவில் புகுந்து அந்த நாட்டு விமானங்களையே கடத்தி இந்த தாக்குதல் தொடுப்பது சாத்தியமே என்கிறாரா முதல்வர்?

அதுவும் அமெரிக்காவின் ராணுவ தலைமை யகமான பெண்டகனை தாக்கும் அளவுக்கு உஸôமா வலிமையானவர் என்றும், அமெரிக்கா பலவீனமான நாடு என்றும் முதல்வர் ஒப்புக் கொள்வாரா?  

உஸôமா கொல்லப்பட்டதை உலக நாடுகளில் பெரும்பாலானவை மகிழ்ச்சியுடன் வர வேற்றுள்ளன என்கிறார் முதல்வர். உலகத்தில் உள்ள எந்தனை நாடுகள் உஸாமா கொல்லப்பட்டதை வரவேற்றன? பட்டியலிட முடியுமா?

அமெரிக்காவின் நேச நாடுகளும், அமெரிக்காவின் நட்பு பேணும் சில முஸ்லிம் நாடுகளும் வரவேற்று உள்ளன. இவர்கள்தான் முதல்வர் பார்வையில் பெரும்பான்மை நாடுகளா?  

"வரலாறு தனது வரிகளை இரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்திற்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதனைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை'' என்று பின்லேடனின் ஆசிரியர் தந்த போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, அதை நிலை நிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த உஸாமா பின்லேடன், தன் கையில் எடுத்த கருவிதான் "பயங்கரவாதம்' என்கிறார் முதல்வர்.

உஸாமாவிற்கு இத்தகைய துர்போதனை செய்த ஆசிரியர் யார் என்றோ, அவரை பற்றிய குறிப்பையோ மறந்தும் கூட முதல்வர் சொல்லவில்லை என்பது ஆச்சர்யமே. "கத்தியைக் கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்' என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை என்றும் கூறுகிறார் முதல்வர்.

ஒரு அமெரிக்க எதிர்ப்பாளரை அதுவும் ஈராக் நாட்டின் மீது இருமுறை படையெடுத்து பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்காவை எதிர்க்க, பாலஸ்தீன மக்களை கொல்லும் இஸ்ரேலுக்கு பக்க பலமாக இருக்கும் அமெரிக்காவை எதிர்க்க நிராயு தபாணியாய் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் பயங்கரவாதியா?

உஸாமாவின் தாக்குதல்கள் என்று கூறப்படுபவை அனைத் தும் அமெரிக்காவிற்கு எதிரானவை யேயன்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் எதிரானவை அல்ல என்பதை ஊன்றி கவனித்தால் உண்மை விளங்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்க பலமாக நிற்பதுதான் சர்வதேச தீவிரவாதம் என்றால் முதல்வர் ஆதரிக்கும் புலிகள் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை முதல்வர் கூறுவாரா? உஸாமா அமெரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டது. கத்தியால் வந்த வினை என்றால் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதையும் இவ்வாறே கூறுவாரா முதல்வர்?

அமெரிக்கா தனக்கு தேவை என்றால் ஒருவரை ஊட்டச்சத்து கொடுத்து உருவாக்கும்; தனக்கு தேவை இல்லை என்றால் அவரையே தீவிரவாதியாக உலகுக்கு அடையாளம் காட்டி கதையை முடிக்கும் என்பதற்கு சதாம்களும், உசாமாக்களும் உதாரணமாக திகழ்கிறார்கள்.

எனவே, ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ, ஒரு நாட்டிற்கோ தீவிரவாத சான்றிதழ் அமெரிக்கா வழங்கிவிட்டால் அது தான் உண்மை என நம்புவது பகுத்தறிவு பாதையில் வந்ததாக கூறிக் கொள்ளும் முதல்வருக்கு அழகா என்பதை அவரே தீர்மானிக்கட்டும்.

-       தரசை தென்றல்