சீமானின்மாளிகை இடிந்தபிறகு
நன்றாகவே தெரிகிறது
ஏழைகளின் குடிசைகள்
அமைச்சருக்கு போட்ட துண்டு
எப்படி விழுந்தது
பட்ஜெட்டில்
பால் காய்ச்சித்தான்
குடித்தனம் போகவேண்டும்
சாராயம் காய்ச்சுபவனும்
நிறைய மிட்டாய்கள்
வாங்கித்தரும் தாத்தாவிற்கு
பாவம் பல்லே இல்லை
தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி
யாருடைய ஆசியோ ?
உயர்ந்து கொண்டேபோகிறது
விலைவாசி
பகுத்தறிவு இல்லாதவனின்
உலக அனுபவம்
வெங்காயம்
சுருக்கமாக
பேசிமுடித்தார்
விரிவுரையாளர்
தன்னம்பிக்கையை
இழக்கவில்லை
விபத்தில் கை இழந்தவன்
வெற்றியை
நெருங்கிவிட்டான்
பலமுறை தோற்றவன்
சலனமில்லாத குளம்
துண்டிலில் மீன்சிக்குமா
சலனத்துடன் மனம்
இதயம் பலவீனமானவர்கள்
திடப்படுத்திக்கொள்ளுங்கள்
பாடகர் பாடப்போகிறார்
வீடு முழுக்க நிறைந்திருக்கிறது
விடுமுறைக்கு வந்துபோன
பேத்தியின் சிரிப்பு சத்தம்
ஆதிக்க வர்க்கத்தின்
ஆட்டத்தை அடக்கவே
அதிர்கிறது பறை
நிறைய பொம்மைகள்
இருந்தும் அழகாயில்லை
குழந்தைகள் இல்லாத வீடு
சிறுவர் பாடல்கள்
அம்மா குளிக்கப்போகின்றோம்
ஆற்றங்கரைக்கு போகின்றோம்
அன்பைத்தருவது நீயம்மா
ஆற்றல் மிக்கது அறிவம்மா
இசையுடன் பெய்யும் மழையம்மா
ஈகையால் சிறக்கும் வாழ்வம்மா
உரலைப்போல் உடல்வலுவம்மா
ஊச்சல் ஆடும் வயசம்மா
எண்ணம் முழுவதும் நீயம்மா
ஏற்றம் காண்பது மனசம்மா
ஐயம் இல்லா உலகம்மா
ஒன்றேகுலமென உணரம்மா
ஓதல் நமக்கு உயர்வம்மா
ஓளவை சொல்லைக்கேளம்மா
சிறுவர் பாடல்கள் [இசைப்பாடல் ]
அக்கா - ராமு தம்பி விறுவிறுப்பாக எங்கே போறிங்க
நீங்க எங்கே போறிங்க
தம்பி – பக்குவமாக பாயை விரித்து படுக்கப்போறங்க
அக்கா படுக்கப்போறங்க
அக்கா – மாலை உறக்கம் உடலுக்கு தீங்கு தெரியாதா தம்பி
உனக்கு தெரியாதா தம்பி
தம்பி - உறக்கத்தை தவிர வேறெதுவும் தெரியதே அக்கா
எனக்கு தெரியாதே அக்கா
அக்கா – விளையாட்டு
தம்பி - விளையாட்டா, விளையாட்டென்றால் என்ன என்ன விளையாட்டு
அ க்கா விளையாட்டு
அக்கா – தம்பி நானும் சொல்வேன் நீயும் கேட்டு தலையாட்டு
தம்பி தலையாட்டு
ஒற்றைக்காலைமடக்கி ஓடுபவனை பிடித்தால் அ து நொண்டி நொண்டி
தம்பி – அக்கா நொண்டி நொண்டி
அக்கா – தம்பி நொண்டி நொண்டி
அக்கா – ஆளைத்தாண்டித்தாண்டி ஆடுவது பாண்டி பாண்டி
தம்பி – அக்கா பாண்டி பாண்டி
அக்கா – தம்பி பாண்டி பாண்டி
அக்கா – கோலைவைத்து ஆடினால் அது கோலாட்டம்
குரங்கைப்போல தாவினால் அது குரங்காட்டம்
தம்பி – கோலாட்டம் அக்கா குரங்காட்டம்
அக்கா – கண்ணை மூடி ஆடினால் அது கண்ணாமுச்சி
தம்பி – அக்கா கண்ணாமுச்சி
அக்கா – தம்பி கண்ணாமுச்சி
மறைந்து மறைந்து ஆடுவது அது ஐசுபரி ஆச்சி
தம்பி - அக்கா ஐசுபரி ஆச்சி
அக்கா - தம்பி ஐசுபரி ஆச்சி
அக்கா –கில்லி தாண்டு கோலிகுண்டு நிறைய ஆட்டம் உண்டு
தம்பி நிறைய ஆட்டம் உண்டு
நீயும் ஆடி உடலைக்காத்தால் அதுவே என்றும் நன்று
தம்பி அதுவே என்றும் நன்று
அக்கா - ராமு தம்பி விறுவிறுப்பாக எங்கே போறிங்க
நீங்க எங்கே போறிங்க
தம்பி – ஆட்டம் போட்டு ஜொராய் நானும் விளையாடப்போறங்க
அக்கா விளையாடப்போறங்க
அக்கா – இராமு தம்பி
தம்பி – நன்றி அக்கா