flight

KLM உலகின் பழமையான விமான நிறுவனம் ஆகும் (1919 ல் தொடங்கப்பட்டது).

Qantas இரண்டாவது பழமையானது (1920 ல் தொடங்கப்பட்டது).

1987 ல் American Airlines நிறுவனம் தங்கள் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கும் Salad ல் இருந்து ஒரு Oliveஐ குறைப்பதன் மூலம் $40,000 சேமித்தது.

Chicago O’Hare’s சர்வதேச விமான நிலையத்தில் ஒவ்வொரு 37 வினாடிக்கும் ஒரு விமானம் Take off செய்யப்படுகிறது அல்லது Land செய்யப்படுகிறது.

A380 ரக விமானத்தின் Wingspan (விமானத்தின் இரு இறக்கைகளுக்கு இடையே உள்ள நேர்க்கோட்டுத் தொலைவு) அந்த விமானத்தை விட நீளமானது (விமானம் 72.7 மீட்டர் நீளமும் Wingspan 80 மீட்டர் நீளமும் இருக்கும்).

Singapore Airlines நிறுவனம் தங்கள் பயணிகளின் உணவிற்காக $700 மில்லியனும் மது பானத்திற்காக $16 மில்லியனும் ஒரு ஆண்டிற்கு சராசரியாக செலவிடுகிறது.

சராசரியாக 3 மணிநேரம் விமானத்தில் பயணிக்கும் பயணியின் உடலில் இருந்து 1.5 லிட்டர் வரை நீர் வெளியேறும்.

New yorkல் உள்ள JFK Airportன் பழைய பெயர் Idlewild Airport.

Boeing 747 ரக விமானத்தின் Wingspan-ன் நீளம் 195 அடி. அது Wright Brothers கண்டுபிடித்த உலகின் முதல் விமானத்தின் Wingspan (120 அடி) ஐ விட நீளமானது.

1999 ல் Alaska Airlines முதன்முதலாக Internet மற்றும் Online-check in முறையை அறிமுகம் செய்தது.

747-8 ரக விமானத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 4,80,000 (32" TVகளுக்கு) போதுமானது.

உலகளாவிய 747 ரக கப்பற்படை விமானங்கள் இதுவரை 78 பில்லியன் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளது. அது நிலவிற்கு 1,01,500 முறை சென்று வருவதற்கான தூரம்.

இது வரை 747 ரக விமானத்தில் 5.6 பில்லியன் மக்கள் பயணித்துள்ளனர். அது உலக மக்கள் தொகையில் 80% ஆகும்.

ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 61,000 மக்கள் அமெரிக்காவில் மட்டும் பறந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பயன்பாட்டில் உள்ள 70% விமானங்களை 1960 களில் உள்ள விமானங்களுடன் ஒப்பிடும் போது அந்த விமானங்களை விட இவை 70% அதிக இருக்கைகளுடன் அதிக தூரம் பயணிக்கும் திறன்மிக்கதாகவும் உள்ளது.

747 ரக விமானத்தின் Wiring-காக 240 லிருந்து 280 கிலோ மீட்டர் வயர்கள் பயன்படுத்தப்படுகிறது.

பயணத்தின் போது விமானி மற்றும் துணை விமானி இருவருக்கும் வெவ்வேறு விதமான உணவு வழங்கப்படும். ஏனென்றால் ஒரே நேரத்தில் இருவருக்கும் Food poison ஏற்பட்டால் விளைவு! !?

வணிகம் சார்ந்த விமானங்கள் 800 Kmph வேகத்தில் செல்லும்.

- ஷேக் அப்துல் காதர்

Pin It