கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது. இமயமலையில் இருக்கும் ஒரு வகைக் காட்டு மாடு, சடைமுடியுடன் இருக்கும். கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு, உடம்பில் மயிரை இழந்துவிட்டா, குளிரில் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.
இதைத்தான் திருவள்ளுவர், ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்’ என்கிறார். மற்றபடி கவரிமான் அல்ல அது. அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம் கவரிமான்.
(ஆதாரம்: முகம்மது அலி எழுதிய ‘இயற்கை: செய்திகள், சிந்தனைகள்’ நூல்)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கவரிமான் இருப்பது உண்மையா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்