தேவையான பொருட்கள் 

சாதம் - 1 கோப்பை

பெரிய நெல்லிக்காய் - 6

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

கறிவேப்பிலை - 2 கொத்து

கடுகு - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

நெய் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

நெல்லிக்காயை பொடியாகத் துருவி, கொட்டையை எடுத்து விட வேண்டும். வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு தாளிக்க வேண்டும். 

அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, சிறிது நேரம் வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கிய நெல்லிக்காய் கலவையுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து, சாதம் குலையாமல் நன்கு கிளற வேண்டும். தனியே சிறிது நெய்யில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கிளறிய சாதத்துடன் சேர்த்து லேசாக கிளறி, பரிமாற வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.