தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 250 கிராம்
புளி – கைப்பிடி அளவு
மிளகாய் தூள் + தனியா தூள் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - அரை கப்
தக்காளி - கால் கப்
பூண்டு பல் - சிறிதளவு
அரைப்பதற்கு:
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
தக்காளி - 1
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு துணுக்கு

செய்முறை:

எண்ணெய் சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளதை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும். கத்தரிக்காயை நான்காக அரிந்து தக்காளிக்கு பின் சேர்த்து வதக்க வேண்டும். சாம்பார் பொடி சேர்த்து ஒரு முறை பிரட்டி புளி தண்ணீர் சேர்க்க வேண்டும்.

அரைக்க வேண்டியதை அரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்ற வேண்டும். கடைசியாக உப்பு மற்றும் அரை தேக்கரண்டி வெந்தயத்தை பொடி செய்து குழம்பில் கொட்டி கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் வெந்து எண்ணெய் மேலே மிதந்ததும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.

Comments

1 comment

1
rrevathi
very sweat

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.