தேவையான பொருட்கள்

சிறுகிழங்கு ‍ 250 கிராம்
எண்ணெய் ‍ 1 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு - 1 பல்
தேங்காய் ‍ 2 மேஜைக்கரண்டி
மிளகாய்- 2
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு ,உ.பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை ‍ கொஞ்சம்

செய்முறை

சிறு கிழங்கைச்சுற்றி இருக்கும் மண்ணை நீக்க, அதனை ஒரு பழைய துணிப்பையில் போட்டு உருட்டினால் தோலோடு சேர்ந்து வந்து விடும்அல்லது தண்ணீரில் போட்டு அலசி தோல் நீக்க வேண்டும். பின்பு அதை சிறியதாக கட் செய்து கொள்ள வேண்டும். தண்ணீரில் சிறுகிழங்கு, உப்பு போட்டு வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். வெங்காயம் நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய், பூண்டு, சீரகம் , மிளகாய் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு , உ.பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். வெந்த சிறுகிழங்கை சேர்த்து பிரட்ட வேண்டும். தேங்காய் கலவை சேர்த்து கிளறி சிம்மில் சிறிது நேரம் வைத்து இறக்க வேண்டும். சிறிது நேரம் கழித்துப் பறிமாற வேண்டும்.

(நன்றி: அறுசுவை.காம்)

Pin It