• ஒரு பெண்ணின் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் செயல்படுவது, சொற்களைப் பயன்படுத்துவது, சைகையை காட்டுவது, குற்றமாகும்.

• வழக்கைத் தாக்கல் செய்யும் ஒவ்வொரு தரப்பினரும், நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் தங்களது தரப்பு வாதத்தை எடுத்துவைக்க நீதிமன்றங்கள் அனுமதி தருகின்றன. வழக்கு விசாரணை பகிரங்கமாக நடத்தப்படுகிறது. கற்பழிப்பு போன்ற சில வழக்குகளில் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது.

• இரண்டு திருமணம், விபச்சாரம், கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது, இது போன்ற வழக்குகளைக் குற்றவியல் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன.

கீழ்கண்ட சம்பவங்களில் தற்காப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மரணம் நிகழ்ந்தாலும், அத்தகைய தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியவர் மன்னிக்கப்படுகிறார்:-

• கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடக்கும்போது;

• கற்பழிப்பு அல்லது இயற்கைக்கு விரோதமான காம உணர்வை தனித்துக் கொள்ள ஒருவர் நடவடிக்கையில் இறங்கும்போது;

• அரசு அதிகாரிகளை அணுகி தனது விடுதலைக்காக முறையிட முடியாத அளவிற்கு ஒருவரைச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கும் நேரத்தில்;

• 7 வயதிற்குக் குறைந்த குழந்தைகளது நடவடிக்கை குற்றமாகாது. சட்டத்தின் விளைவுகள், குற்றத்தின் தன்மைகளை உணரும் பருவம் அடையும் முன்னர், 12 வயது வரையுள்ள குழந்தைகளது நடவடிக்கையும் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், அந்தக் குழந்தை தனது நடவடிக்கையின் முழு விளைவுகளையும் உய்த்துணரும் பக்குவத்தைப் பெறவில்லை. ஒரு குற்றம் நடக்கும்போது, அந்தக் குற்றத்தைச் செய்தவர் மனநோயாளியாக இருந்தால், அவர் மன்னிக்கப்படுகிறார். அதே நேரத்தில் மனநோயாளியைத் தாக்கிச் சமாளிக்க சட்டபடி உரிமையுண்டு.

(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)

Pin It