Project Cheeta என்ற திட்டத்தின் மூலமாக இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகளை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் இருந்த ஆசிய சிறுத்தைகள் வேட்டைகளின் மூலமாக முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவில் இருந்து சிறுத்தைகளை (ஆப்ரிக்க சிறுத்தைகள்) இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வனப் பகுதிகளில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய என்ற இந்த அழகிய நிலம் ஒரு காலத்தில் எத்தனையோ விலங்குகளுக்கு சொந்தமாக இருந்தது. உலகின் வேறு எந்த நாடுகளுக்கும் இல்லாத பெருமை இந்தியாவுக்கு இருந்தது. சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் சிறுத்தை புலி இந்த நான்கு விலங்குகளும் இந்தியா என்ற ஒரே தேசத்தில் வாழ்ந்தன.

புலிகளின் நிலை பற்றி நான்கு அறிவீர்கள். சிங்கங்கள் (ஆசிய சிங்கங்கள்) குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. சிறுத்தை புலி (Leopard) இந்தியா முழுக்க பரவி இருக்கும் போதிலும், அவையும் நிறைய அச்சுறுத்தலை சந்திக்கவே செய்கின்றன. சிறுத்தைகள்(Cheeta) இன்று இந்தியாவின் எந்த வனப் பகுதியிலும் ஒன்று கூட மிச்சம் இல்லை.

மத்திய அரசு சிறுத்தைகளின் வாழ்வதற்க்கான தகுந்த வனம் எதுவாக இருக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தேர்ந்தெடுத்துள்ளது. சிறுத்தைகளின் இரை உணவு எங்கு சரியானபடி கிடைக்கும் மற்றும் சிறுத்தைகள் வாழ்வுக்கு தேவையான இட வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வனப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ பல்பூர் வன விலங்கு சரணாலயம்
ராஜஸ்தானில் உள்ள ஷாகர்ஹ் வனப்பகுதி
மத்திய பிரதேசத்தில் உள்ள நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம்

இந்த மூன்று வனப்பகுதிகளும் சிறுத்தைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்க்கை சமநிலையை உறுதி செய்வதில் ஊன் உண்ணிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. எனவே சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவருவது மிகவும் வரவேற்க்கதக்க செய்தி. அதே சமயம் இந்த திட்டத்திற்கு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டியுள்ளது. நாம் இழந்த ஒன்று மீண்டும் நமக்கு கிடைக்கும் போது, ஒரு திருவிழா மக்கள் இதை கொண்டாடும் மனப்பக்குவம் வரவேண்டும். தற்போது கூட நாம் வரவழைப்பது ஆப்ரிக்க சிறுத்தைகளே. ஆசிய சிறுத்தைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஈரானில் இன்றும் மிச்சம் இருக்கிறது. அவற்றையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு கொண்டு வந்தால் அவற்றின் எண்ணிக்கையும் மேன்படும். ஆசிய சிறுத்தைகளை அழிவில் இருந்து காப்பாற்றி விட முடியும்.

உலகின் அழகிய நிலத்தில் பிள்ளைகளாக பிறந்து விட்டு, இதை கூட நம்மால் செய்து காட்ட முடியாதா என்ன?

Pin It