கைரோப்பிராக்டிஸ் எனப்படும் தண்டுவடத் திருத்த துறை இப்போது ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலமாகிவருகின்றது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெரும்பான்மையோர் கால்வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை வலி ஆகியவற்றில் அவதிப்படுகின்றனர். மனிதனின் செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் முதுகெலும்பு ஆகும். இயற்கையிலோ அல்லது தவறான நடைமுறைப் பழக்கவழக்கங்களினால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. அதிக அளவில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும் முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முதுகெலும்பு விலகுதல், ஆஸ்டியோ பொராசிஸ் என அழைக்கப்படும் கால்சியம் குறைதல், முதுகெலும்பு மூட்டுகளின் செயல்திறன் குறைதல் குழாய் அடைப்புகள் ஆகியவற்றால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது.

முதுகெலும்பு மூட்டுகளில் உள்ள திரவம் குனிந்தோ, வளைந்தோ நீண்ட நேரத்துக்கு தொடர்ச்சியாக வேலை செய்தால் அதன் செயல் திறனை இழக்கின்றது. உடலின் ஒரே இடத்தில் எடை அதிகமாகும் போதும் முதுகு எலும்புகளின் உள்ள திரவம் தன் வேலையைச் சரிவர செய்யவில்லை. எலும்பின் உறுதித் தன்மை கால்சியத்தினால் தான் பாதிக்கப்படுகிறது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. குழாய் அடைப்புகள் மூளையும் முதுகெலும்பும் இணையும் இடத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். இதனால் தலை வலியும் கழுத்து வலியும் ஏற்படுகின்றன.

தண்டுவடக் குறைகளைக் திருத்தும் கைரோப்பிராடிக்ஸ் முறை அமெரிக்காவில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த முறையில் மருந்துகளோ அல்லது ஆபரேஷன்களோ பயன்படுத்தப்படுவதில்லை. வலிகளை போக்குவதற்கு சிறந்த முறையாக இது பயன்படுத்தப்படுகின்றது. தண்டுவடத் திருத்த மருத்துவத்துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

Pin It