எப்படி நம் மூளை சில சம்பவங்களை மறக்காமல் இருக்கிறது என்பதற்கான ஜீனை ஜான் குசோவ்ஸ்கி என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். பொதுவாக ஜீனுக்கும் நினைவுகளுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்றுதான் நரம்பியலாளர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் மறக்க முடியாத சம்பவங்களை ஆழமாக நினைவில் பதித்து வைக்க ஆர்க் (Arc) என்ற ஜீனின் சேவை தேவைப்படுகிறது.

மூளையில் ஹிப்போகேம்ப்பஸ் என்ற கொம்பு போன்ற உறுப்பில்தான் நினைவுகள் பதிகின்றன. திருமண நிச்சயம், வேலையில் சேர்ந்த முதல்நாள், கல்லூரி வாசலில் காலடி எடுத்து வைத்தது போன்ற தனி நினைவுகள் நிரந்தரமாக்கப்படும்போது ஆர்க் என்ற ஜீனின் செயல் அத்தியாவசியமாகிறது. இதன் நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டால் விரும்பிய நிகழ்ச்சிகளை மறந்துபோகமால் நினைவில் பதித்துக்கொள்ள முடியும். அல்ஷெய்மர் என்ற நரமபியல் நோயால் பாதிக்கப்பட்டு நினைவுகளை இழப்பவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பின் மூலம் நிவர்த்தி கிடைக்கலாம்.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Pin It