கோவணம் கட்டாமல் சென்றவன்
ஜட்டிபோட்டு சென்றபோது
மாறிய ஆச்சாரம்?

வீடுமுதல் வீடுவரை
அய்யப்பன்கோவில்
நடைபயணம்
ஊர்திகளில்
பயணித்த போது
மாறிய ஆச்சாரம்?

நாற்பத்தெட்டு
நாள் விரதம் மாறி
இன்று மாலைபோட்டு
நாளை சபரிமலை
சென்றபோது
மாறிய ஆச்சாரம்?

வெறும் காலில் மலையேறி
ஒருமுடியில் இருந்த
உணவுதின்றது மாறி
உணவக வியாபாரம்
உச்சி சென்றபோது
மாறிய ஆச்சாரம்??
நெய் எரிந்த வெளிச்சம்
மின்விளக்காய்
பரிணமித்தபோது
மாறிய ஆச்சாரம்???

மலைமேல் மாலை அவிழ்த்து,
மலையிறங்கி கோவணம்
அவிழ்த்து குடி,கும்மாளம்
போட்ட சாமிகளின்
கொண்டாட்டத்தால்
மாறிய ஆச்சாரம்???

பெண்ணின் பிறப்புறுப்பில் ???
தீட்டோடு பிரவித்த
அய்யப்ப(னும்)
பக்த(னும்) பெண்களை
தீட்டென ஒதுக்குவது
தங்களின் ஆச்சார
பலகீனம் பல்லிளித்து
உலகம் சிரிக்குது,

பெண்கள் வருகை
கண்டு பீதியில் பேதியாவது
அய்யப்பனா??
அய்யப்ப பக்தனா??
ஆச்சார போர்வைக்குள்.

- முல்லைவேந்தன் பெரியார்

Pin It