உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவர் சங்கர்-கௌசல்யா தம்பதி மீது கோரப் படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டு தலித் இளைஞன் சங்கரை ஆதிக்க சாதி வெறியர்கள் படுகொலை செய்து, கொடூரக் காயங்களுடன் மனதை ஊனப்படுத்தி கெளசல்யா பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகிறார்.

*முன்கூட்டியே பாதுகாப்பு கோரியும், பாதுகாப்பு வழங்கத் தவறி படுகொலை நடக்க காரணமான திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியும்,

*எழுபதுக்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்தும், இதுவரை அவைகளைத் தடுத்து நிறுத்த முன் முயற்சிகள் எடுக்கத் தவறிய தமிழக அ.தி.மு.க அரசைக் கண்டித்தும்,

*ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரியும் இந்த முற்றுகை நடைபெறுகிறது.

போராட்டத்தில் பெறும் திரளாக தோழர்கள் பங்கேற்க வேண்டும், குறிப்பாக பெண் தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என பேரவையின் நிறுவனர் அழைப்பு விடுத்துள்ளார்.

21.3.2016 அன்று சரியாக காலை 10.30க்கு முற்றுகை, ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

- ஆதித்தமிழர் பேரவை

 

Pin It