பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தை சமூக நீதிக்கான மாதமாக அனுசரிக்க சென்னையிலுள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளது.

  • அம்பேத்கரின் எழுத்து, ஆளுமை ஆகியவற்றால் உந்தப்பட்டு சமூக வெளியில் பயணித்தவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், அவர்கள் பெற்ற படிப்பினைகள்
  • அம்பேத்கரின் சிந்தனை, பார்வை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு இங்கு இயங்கிய அரசியல் அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பற்றிய செய்திகள், பதிவுகள்
  • அம்பேத்கரின் வாழ்க்கையை எழுதுதல், அவர் காட்டிய வழியில் நின்று பௌத்தத்தை ஏற்று செயல்படுதல் ஆகியனவற்றை குறித்த பகிர்வுகள்
  • அம்பேத்கர் முன் வைத்த சனநாயகம், சமத்துவம் சகோதரத்துவம் அதற்கு ஆதாரமாக இருக்க வேண்டிய விழுமியங்கள் குறித்த உரையாடல்கள்
  • அம்பேத்கர் விரும்பிய சாதி ஒழிப்பு என்பதை கலை, இலக்கிய, நாடக வெளியில் பயணிப்போர் கையிலெடுத்துள்ள விதங்கள்

என்று பல பொருட்களில் விவாதங்களும் பகிர்வுகளும் நடக்கவிருக்கின்றன. சாதி-ஒழிப்பு பாடல்களை இசைக்கும் நிகழ்ச்சியுடன் மார்ச் 28, 2015 அன்று தொடங்கும் சமூக நீதி நிகழ்வுகள் தொடர்ந்து ஏப்ரல் 26, 2015 வரைக்கும் ஒவ்வொரு சனி, ஞாயிறன்றும் நடைபெறும்.

மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சிகளைச் செய்ய விரும்புகிறோம். இந்த அடிப்படையில் டாக்டர் அம்பேத்கரின் சாதியை ஒழிக்கும் வழி நூலை முன்வைத்து, கட்டுரை, குறும்படம், ஒளிப்படப் போட்டிகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். மேலும் தகவல்களுக்கு http://www.panuval.com/blog/?p=29 பார்க்கவும்.

சமூகநீதி மேல் பற்றுள்ள அனைவரும், சமூகநீதி குறித்து அறிந்து கொள்ளக் கூடியவர்களையும், எதிர்pபவர்களையும் ஆவலுடன் கலந்துரையாடல்களுக்கு அழைக்கிறோம்.

Pin It