நாள்: 19-05-2014, திங்கள்

இடம்: பாலு மகேந்திரா சினிமா பட்டறை, தசரத புரம் (சாலிகிராமம்)

நேரம்: மாலை 5.30 மணி.

விருதுகளை வழங்குபவர்: இயக்குனர் வெற்றிமாறன்

பாலு மகேந்திரா அவர்களின் நினைவாக, ஒவ்வொரு வருடமும் பாலு மகேந்திராவின் பிறந்த நாளான, மே 19ஆம் தேதி, பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் குறும்படங்களுக்கான விருது வழங்கப்படும் என்று முன்னமே அறிவித்திருந்தேன். அதன்படி, எதிர்வரும் திங்கள் (மே 19) மாலை 5.30 மணியளவில், சாலிகிராமத்தில் உள்ள பாலு மகேந்திரா சினிமா பட்டறையில், குறும்படங்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு, விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். இதுவரை குறும்படங்களுக்கான பிரத்யேக விருதுகள் எதுவும் வழங்கப்படாத காரணத்தால், தமிழ்நாட்டில் குறும்படங்கள் வெளிவந்தக் காலத்தில் இருந்தே, அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு வருடமும், குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்படும்.

2014 ஆம் ஆண்டிற்கான தமிழ் ஸ்டுடியோ - பாலு மகேந்திரா விருது பெற்ற குறும்படக் கலைஞர்கள் விபரங்கள்:

சிறந்த இயக்கம்: அகிரா நித்திலன் (புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்)

சிறந்த ஒளிப்பதிவு: அபி நந்தன் (போஸ்ட்மேன்)

சிறந்த நடிப்பு: பாண்டியன் (புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்)

சிறந்த படத்தொகுப்பு: அபினவ் சுந்தர் நாயக் (தர்மம்)

சிறந்த இசை/ஒலியமைப்பு: பைசல் (ஆழத்தாக்கம்)

விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த இயக்கத்திற்கான விருது பெற்ற, புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் குறும்படம் திரையிடப்படும்.

Pin It