தமிழினத்தை சீர்குலைக்கும் ஜாதி-தீண்டாமை ஒடுக்கு முறைகள்; பறிக்கப்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இடஒதுக்கீடு உரிமைகள்; ‘உலகமயம்’ என்ற கொள்கையால் சுரண்டப்படும் பொருளாதார உரிமைகள் ஆகியவற்றை மக்களிடையே எடுத்து விளக்கிடும் ‘சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயண’த்தை திராவிடர் விடுதலைக் கழகம் ஜூலை 24 ஆம்தேதி தொடங்கி, ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடத்துகிறது. 20 நாட்கள் 64 ஊர்களில் இந்தப்பயணம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முழுமையாகப் பயணத்தில் பங்கேற்கிறார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்ஆங்காங்கே பயணத்தில் பங்கேற்கிறார்.

1933 ஆம் ஆண்டில் ஈரோட்டில் டிசம்பர் 28, 29 தேதிகளில் பெரியார் தனது இல்லத்தில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி, சமதர்மத் திட்டத்தை வெளியிட்டார். சுயமரியாதை இயக்கம் முன் வைத்த சமதர்மத் திட்டம், ஈரோடு சமதர்மத் திட்டம் என்று அழைக்கப்பட்டது. இன்று ஒடுக்கப்பட்ட மக்கள், பார்ப்பனிய கட்டமைப்பில் ஜாதி-தீண்டாமை சுரண்டலுக்கும், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் பொருளாதார சுரண்டலுக்கும் உள்ளாகி வரும் சூழலில், காலத்தின் அறைகூவலுக்கு முகம் கொடுக்க திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் உருவாக்கித் தந்த சுயமரியாதை சமதர்ம திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட பரப்புரைப் பயணத் திட்டம்:

 24. 7. 13 புதன் - மாலை 6, மயிலாடுதுறை

 25. 7. 13 வியாழன் - மாலை 4பேரளம், மாலை 5 திருவாரூர், இரவு7 மன்னார்குடி

 26. 7. 13 வெள்ளி - காலை 11மதுக்கூர், மாலை 4 பட்டுக்கோட்டை, இரவு 6 பேராவூரணி

 27. 7. 13 சனி -காலை 10 கறம்பக்குடி, மாலை 4 கந்தர்வகோட்டை, மாலை 6 திருவெறும்பூர், இரவு7 காட்டூர்

 28. 7. 13 ஞாயிறு - காலை 11, சமயபுரம் டோல்கேட், மாலை 5 பாடாலூர், இரவு 7 பெரம்பலூர்

 29. 7. 13 திங்கள் - காலை 11துறையூர், மாலை 5 குளித்தலை, இரவு 7 கரூர்

 30. 7. 13 செவ்- காலை 11கொடுமுடி, மாலை 4 திருச்செங்கோடு, 5 பள்ளிபாளையம், இரவு7குமாரபாளையம்

 31. 7. 13 புதன் - காலை 11 பவானி இலட்சுமி நகர், மாலை 5 ஈரோடு, மாலை 7 சென்னிமலை

 1. 8. 13 வியாழன் - காலை 8 ஊத்துக்குளி, மாலை 5 திருப்பூர், மாலை 6 பல்லடம், இரவு 7தாராபுரம்

 2. 8. 13 வெள்ளி - காலை 8 கணியூர், காலை11 மடத்துக்குளம், மாலை 5 உடுமலைப்பேட்டை, இரவு 7 பொள்ளாச்சி

 3. 8. 13 சனி - காலை 11 கிணத்துக்கடவு, மாலை 5 கோவை, இரவு 7 மேட்டுப்பாளையம்

 4. 8. 13 ஞாயிறு - காலை 11 சேவூர், மாலை 5 நம்பியூர், இரவு 7 கோபி

 5. 8. 13 திங்கள் - காலை 8 குருவரெட்டியூர், மாலை 5 காவலாண்டியூர், மாலை 6 கொளத்தூர், இரவு 7 மேட்டூர்

 6. 8. 13 செவ்வாய் - காலை 11மேச்சேரி, மாலை 5 ஓமலூர், இரவு 7 இளம்பிள்ளை

 7. 8. 13 புதன் - காலை 11வாழப்பாடி, மாலை 5 ஆத்தூர், இரவு 7 கள்ளக்குறிச்சி

 8. 8. 13 வியாழன் - காலை 11 சங்கராபுரம், மாலை 5கடுவனூர், இரவு 7 திருவண்ணாமலை

 9. 8. 13 வெள்ளி - காலை 11செங்கம், மாலை 5 ஊற்றங்கரை, இரவு 7 காவேரிப்பட்டினம்

 10. 8. 13 சனி - காலை 11 ஜோலார்பேட்டை, பகல் 1 வாணியம்பாடி, மாலை 5 வேலூர், இரவு 7காஞ்சிபுரம்

 11. 8. 13 ஞாயிறு - காலை 11 $பெரும்புதூர், பகல் 1 பூந்தமல்லி, மாலை 6 சென்னை

 12. 8. 13 திங்கள் - காலை 11 மாமல்லபுரம், மாலை 5 புதுச்சேரி, இரவு 7 அரியாங்குப்பம்

 பயணத்தில் மந்திரமா? தந்திரமா?, வீதிநாடகம், பறையாட்டம், சொற்பொழிவு ஆகியவை இடம்பெறும்.

தொடர்புகளுக்கு:

பயணத்தடம்  : பால். பிரபாகரன், 98650 13 393
முன்ஏற்பாடு  : திண்டுக்கல் சி. இராவணன் 97868 89325 மேட்டூர் அ. சக்திவேல் 9442513 177
பயணக்குழு  : சேவூர் கு. செந்தில்குமார் 99947 34442

- பால். பிரபாகரன், கழகப் பரப்புரைச்செயலாளர்

Pin It