அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதி நத்தம் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளவரசனும் அருகில் உள்ள செல்லன்கொட்டாய் வன்னிய கிராமத்தை சேர்ந்த திவ்யா என்பவரும் கடந்த 8-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறி அக்டோபர் 15ந்தேதி பதிவுத் திருமணம் செய்துகொண்டு சேலம் டி.ஐ.ஜி சஞ்சய்குமார், எஸ்.பி. அஸ்ரத் கார்க் முன்னிலையில் தஞ்சமடைந்தனர். இன்றுவரை அவர்கள் காவல்துறையின் பாதுகாப்பில்தான் இருந்து வருகின்றனர். திவ்யாவும் இளவரசனும் காதலித்தது செல்லன்கொட்டாய் கிராமத்திற்கே தெரியும் என்பதை வி.பி. மதியழகன் பா.ம.க ஒ.செ, வீட்டிடமே   நத்தம் காலனி கிராமத்தைச் சேர்ந்த ஊர்த்தலைவர் சக்தி தலைமையில் 10பேர் சென்று முறையிட்டோம். இந்நிலையில் கடந்த 17.10.12 அன்று முதல் வி.பி. மதியழகன் வெள்ளாளப்பட்டி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர், பா.ம.க ஒன்றிய செயலாளர்., குட்டூர், ஜே. ராஜா, கொல்லப்பட்டி, (வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்), பொன்னுசாமி, புளியம்பட்டி. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர், சவுக்குத்தோப்பு., நடராஜ் மர வியாபாரி, வாணியம்பாடியான்கொட்டாய், லாரி மாது செங்கல்மேடு, தென்னரசு, செல்லன்கொட்டாய், கணேசன், செங்கல்மேடு, குமாஸ்தா மாது, கொட்டாவூர், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னசாமி ஆகியோரின் தலைமையில் திவ்யாவை ஒப்படைக்கக் கோரி தொடர்ந்து இரு கிராமத்துக்குமான பஞ்சாயத்துக் கூட்டத்தை மூன்று முறை நடத்தினார்கள்.

கடந்த 5.11.12 அன்று இறுதியாக பஞ்சாயத்தை கூட்டி ஒப்படைக்கக்கோரி நிர்ப்பந்தித்தனர். அதற்கு நாங்கள், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று விசாரித்து சொல்கிறோம் என்று இரண்டு நாள் அவகாசம் கேட்டுவிட்டு வந்தோம். பின்பு 7.11.12 அன்று மதியம் 1.00 மணியளவில் இளவரசனின் பெற்றோர்கள், திவ்யாவின் அம்மா மற்றும் உறவினர்கள் என இரு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20பேர் திவ்யாவும், இளவரசனும் இருக்கும் இடத்திற்குச் சென்று திவ்யாவிடம் திவ்யாவின் அம்மா மற்றும் உறவினர்கள் பிரிந்துவந்துவிடு என்று காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார்கள். அதற்கு திவ்யாவோ, நான் வீட்டிற்கு வந்தால் என்னை கொன்றுவிடுவீர்கள், ஆதலால், நான் இளவரசனோடே வாழ்ந்துவிடுகிறேன் என்று கூறி மறுத்துவிட்டார். எனவே நாங்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டோம்.

சிறிது நேரத்திற்குள்ளேயே திவ்யாவின் அப்பாவான நாகராஜ் இறந்துவிட்டதாகத் தகவல் வந்ததை அடுத்து, அவரின் சடலத்தை எடுத்துக்கொண்டு, நாயக்கன்கொட்டாய் பகுதியில் வைத்துவிட்டு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கையில், பெட்ரோல் குண்டுகள், தடி, கடப்பாரை, சம்மட்டியுடன் நத்தம் காலனிக்குள் நுழைந்து அனைத்து வீடுகளையும் அடித்து நொறுக்கி கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீடுகள் மற்றும் பொருட்களையும் தீயிட்டுக்கொளுத்தினர். மேலும் பீரோவில் இருந்த நகை, பணம், பாத்திரங்கள், அனைத்தையும் வண்டிகள் மூலம் ஏற்றிச்சென்றனர். இத்தாக்குதல் நடக்கும்போது காவல்துறையோ, தீயணைப்பு வண்டியோ உள்ளே வராமல் தடுப்பதற்காக சாலையின் குறுக்கே பல மரங்களை வெட்டியுள்ளனர். ஊருக்கு வெளியே 20 போலீசார் இருந்தும் மூன்று மணிநேரமாக நடந்த தாக்குதலை தடுக்கவோ உடனடியாக நடவடிக்கை எடுத்து, தாக்கிக் கொண்டிருக்கும் சாதி வெறியர்களை கைது செய்யவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்கிய சாதி வெறி கும்பல்கள் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமத்தையும் தாக்கி தீக்கிரையாக்கியுள்ளனர்.

எல்லாம் நடந்து முடிந்த பின்புதான் போலீசும், அதிகாரிகளும் வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்பதை பார்க்கும்போது முன்கூட்டியே ஒரு மாதமாக சதி திட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காவல்துறையும், உயர் அதிகாரிகளும் Qபிரிவு போலீசாரும் துணைபோயுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. காரணம் வி.பி. மதியழகன் பா.ம.க ஒ.செயலாளர் தலைமையில் சாதி ஆதிக்கவாதிகளோ பஞ்சாயத்து பேசிக்கொண்டே தாக்குதலுக்கான தயாரிப்புகளை திட்டமிட்டு வந்துள்ளனர். ஏனென்றால் நாகராஜ் இறந்த அரைமணி நேரத்திலேயே எப்படி பெட்ரோல் குண்டுகள், தடிகள், சம்மட்டி, வீச்சறுவால் ஆகியவற்றுடன் 1000க்கும் மேற்பட்டோர் திரளமுடியும்? என்பதிலிருந்து சதிதிட்டத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

எங்களின் கிராமங்களை அழிப்பதற்காகவே நாகராஜ் இறப்பையும், திவ்யா, இளவரசன் காதலையும் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு தூண்டுகோலாக தொடர்ந்து பேசிவரும் காடுவெட்டி குருவும், இராமதாசும் திட்டமிட்டே தேர்தல் அரசியல் நலனுக்காக, தருமபுரியில் வன்னிய சாதிவெறியை ஊக்குவித்து பொதுக்கூட்டங்களில் பேசியும், பகிரங்கமாக அறிக்கைகளை வெளியிட்டும் உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு தமிழக அரசு இதுவரை எவ்வித கண்டனமோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என்பது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு தூண்டுகோலாய் இருந்து வழிநடத்திய முக்கிய குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழக அரசு இதுவரை கைதுசெய்யவில்லை. அனைத்தும் இழந்து நிற்கும் எங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கவோ, அதற்கான நஷ்ட ஈடோ வழங்காமல் மறு சீரமைப்பு மட்டுமே செய்து தருவோம் என்று அரசு தரப்பில் கூறிவருகின்றனர்.

இத்தகைய சூழலில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராம தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான சாதி ஆதிக்கவெறித் தாக்குலை கண்டித்தும், தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்திய முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், இழந்த மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு உரிய நிவாரணத்தை வழங்க வலியுறுத்தியும் எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இப்போராட்டத்திற்கு ஐனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் முழு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கைதுசெய்யப்பட வேண்டிய முக்கிய குற்றவாளிகள்

  1. வி.பி. மதியழகன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர், வெள்ளாளப்பட்டி ஊராட்சி.
  2. ஜே. ராஜா, கொல்லப்பட்டி, (வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்),
  3. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர், சவுக்குத்தோப்பு.,
  4. ராக்கெட் ராமநாதன் மத்தன்கொட்டாய், அ.இ.அ.தி.மு.க
  5. குமாஸ்தா மாது, கொட்டாவூர், வன்னியர் சங்க மாவட்டச்செயலாளர்
  6. கணேசன் செங்கல்மேடு, பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர்,
  7. கன்பார்ட்டி முருகன் செல்லன்கொட்டாய்.
  8. பாலு ரியல் எஸ்டேட் செல்லன்கொட்டாய்
  9. சிவன் மெக்கானிக்கல்ஸ் செல்லன்கொட்டாய்

10.  வேடி தபெ மூக்கன் கதிர்நாயக்கனள்ளி.

11.  லாரி மாது செங்கல்மேடு,

12.  சத்தியா கபெ சின்னசாமி குட்டூர்

13.  சேகர் தபெ சின்னவாத்தியார் கோடிக்கொட்டாய்.

14.  மாது த பெ கரியன் கோணையம்பட்டி

15.  பழனி தபெ கரியன் கோணையம்பட்டி

16.  சிவா தபெ சின்னசாமி மெடிக்கல்ஸ் நாயக்கன்கொட்டாய்

17.  ராஜேந்திரன் தபெ காடையன்

18.  அசோக் தபெ ராஜேந்திரன் பா.ம.க சிமெண்ட் கடை நாயக்கன்கொட்டாய்

19.  கிருஷ்ணன் தபெ தருமன் நாயக்கன்கொட்டாய்

20.  பெரியசாமி தபெ அப்பாதுரை

21.  சதீஷ் தபெ மகா நாயக்கன் கொட்டாய்

22.  பிரதீப் தபெ கஜேந்திரன் நாயக்கன்கொட்டாய்

23.  ஆறுமுகம் தபெ சேட்டு நாயக்கன்கொட்டய்

24.  தேவேந்திரன் தபெ கோபால் டைலர், நாயக்கன்கொட்டாய்

25.  விவேக் தபெ பொன்னுசாமி கோணையம்பட்டி

26.  பெரியசாமி தபெ காளியப்பன் கோணையம்பட்டி

27.  சின்னராசு தபெ பெருமாள் சிவில் சப்ளை, கோணையம்பட்டி

28.  மூர்த்தி தபெ பொன்னு கோணையம்பட்டி

29.  காவேரி தபெ மாதையன் கோணைம்பட்டி

30.  இளநீர் மாது கோணையம்பட்டி

31.  ராஜா தபெ கண்ணாயிரம் இரக்கிரியான் கொட்டாய்

32.  ஆர்.கே. சின்னசாமி தலைமையில் 10 பா.மா.கவினர் இரக்கிரியான் கொட்டாய்

33.  கிருஷ்ணன் சவுளுப்பட்டி தலைமையில் 15பேர்

34.  பழனி தபெ மாரியப்பன் சவுளுப்பட்டி

35.  சின்னசாமி தபெ கரியப்பன் சவுளுப்பட்டி

36.  தனம் சிவில் சப்ளை ஒன்னியம்பட்டி

37.  வெற்றி அ.தி.மு.க செயலாளர் ஒன்னியம்பட்டி

38.  Q பிரிவு டி.எஸ்.பி லோகநாதன்,

39.  டி.எஸ்.பி கோபி

40.  நக்சல் ஒழிப்புப்பிரிவு சுபாஷ் காவல் ஆய்வாளர்

41.  கர்னல் (எ) மகாலிங்கம், தபெ முருகன் லலிதானூர்

42.  தவுட்டு மில் மகாலிங்கம் தபெ சின்னத்தம்பி (எ) பொன்னுசாமி

43.  தங்கவேல் தபெ சுந்தரம்

44.  சிக்காரவேல் தபெ நாராயணன் (முன்னாள் ராணுவம்)

45.  ரவிக்குமார் தபெ வேடியப்பன்

46.  சக்கரவர்த்தி தபெ வேடியப்பன்

47.  கிருஷ்ணன் தபெ பீமன் என்கிற காளியப்பன்

48.  நாகராஜ் தபெ கந்தசாமி

49.  மாரியப்பன் தபெ சின்னசாமி, புளியம்பட்டி, கொல்லங்கொட்டாய்

50.  முனியப்பன் தபெ வேடியப்பன், புளியம்பட்டி, கொல்லங்கொட்டாய்,.

51.  முருகன் தபெ வெங்கட்ராமன், புளியம்பட்டி, கொல்லங்கொட்டாய்,

52.  சுப்ரமணி தபெ நாராயணன், புளியம்படடி, கொல்லங்கொட்டாய்,

53.  முருகேசன் (எ) பால்டெய்ல் புளியம்பட்டி, கொல்லங்கொட்டாய்.

54.  கனகராஜ் தபெ கணேசன், ரைஸ்மில் லலிதானூர்

55.  சக்திவேல், சாரல் ஸ்டுடியோ நாயக்கன்கொட்டாய்

56.  சுதாகர் தபெ பெருமாள், புளியம்பட்டி

57.  தமிழரசன் சவுளுப்பட்டி

58.  கலைமணி தபெ சிவா, நாயக்கன்கொட்டாய்

59.  சக்கு தபெ கருப்புச்செட்டி நாயக்கன்கொட்டாய்

60.  கிருஷ்ணமூர்த்தி, ரவி தலைமையில் 20 பேர் சீராம்பட்டி

61.  காரல் மார்க்ஸ் தபெ சேகர் சவுளுப்பட்டி

62.  ரவி தபெ மீசை சுந்தரம் இரக்கிரயான்கொட்டாய்

63.  சிவக்குமார் தபெ காவேரி இரக்கிரியான் கொட்டாய்

64.  ரைஸ்மில் விஜயன் நாயக்கன்கொட்டாய்

65.  நடராஜ் மர வியாபாரி, வாணியம்பாடியான்கொட்டாய்,

தமிழக அரசே

  1. கொடூர சாதிவெறித்தாக்குதலில் ஈடுபட்டு கூட்டுக்கொள்ளையடித்த முக்கிய முதன்மை குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்.
  2. நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி, தாழ்த்தப்பட்ட கிராமங்கள் மீதான தாக்குதல் வழக்குகள் அனைத்தையும் பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு மாற்று.
  3. ஆறுமணி நேரமாக நடந்த சாதிவெறி கொடூரத் தாக்குதல்களையும், கூட்டுக் கொள்ளையையும் வேடிக்கை பார்த்த காவல் உயர் அதிகாரிகள் மீது வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடு.
  4. சாதி வெறித் தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களுக்கு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தலா 15 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடாக கட்டிக்கொடு.
  5. தாக்குதலுக்கு உள்ளான நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி, ஆகிய கிராமங்களை முதல்வர் அவர்கள் வன்கொடுமைச் சட்ட விதிகள் 1995ன் பிரிவு 16ன்படி மக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் பார்வையிட வேண்டும்.
  6. அத்துமீறி தாழ்த்தப்பட்ட கிராமங்களில் நுழைந்து சாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்டு கூட்டுக்கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய். கொள்ளையடித்த தாழ்த்தப்பட்ட மக்களின் நகை, பணம், பாத்திரம், அசையா சொத்துக்கள் மற்றும் ஆவணங்களையும் மீட்டுகொடுக்க நடவடிக்கை எடு.
  7. வன்கொடுமை சட்டவிதிகள் 1995 பிரிவு (3) ன்படி தாக்கப்பட்ட, மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ள கிராமங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதமும், ஆயுத உரிமையையும் உடனடியாக வழங்கு
  8. தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்களின் தாக்குதலுக்கு அடிப்படையாக சதித்திட்டம் தீட்டி வன்முறையை தூண்டிவிட்ட பா.ம.க நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாசையும், வன்னிய சாதித்தலைவர் காடுவெட்டிகுரு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(B) 153(A) 505(1) (B) (C). 505(2) வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி கைது செய்.
  9. கடந்த மே மாதம் மாமல்லபுரத்திலும், செப்டம்பர் மாதம் கிருஷ்ணாபுரத்திலும் நடந்த பா.ம.க வின் பொதுக்கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி பேசிய வன்னிய சங்கத்தலைவர் காடுவெட்டி குரு மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்.

இவண்

நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஊர்ப் பொது மக்கள்

தருமபுரி

Pin It