ஒரு நான்கு நாளைக்கு சேர்ந்தாற் போலத் தூங்கி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு நான்கு பகல்கள் சேர்ந்தாற் போல வந்து விட்டால்... இன்னும் எத்தனை நலமாயிருக்கும். 

விசுக் விசுக்கென இரவு வந்து விடுவது, இம்சையாய் இருக்கிறது.

இரவானால் தூங்குவதும் தூங்குவதற்கு இரவை போர்த்துவதும் போர் அடிக்கும் மனிதக் காரியங்களாகப் படுகிறது. எனக்கு ஒவ்வொரு இரவும் நிலை கொள்வதில்லை. இரவின் கண்களில் காணச் சகியாத இறுக்கத்தால் நான் பெரும்பாலும் தூங்காமலே இருக்கிறேன்.  படுத்ததும் தூங்கி விடுபவர்களைப் பார்த்தால்... பரிதாபமாக இருக்கும். செத்த உடலில் மூச்சு ஏறி இறங்கும் வித்தையைக் காணக் காணச் சிரிப்பாய் வரும்.

"உன்ன மாதிரி ஆளுங்களுக்கு ஒரு இடம் இருக்கு. போய் பாரு" என்ற நண்பனின் பெயரை இங்கு சொல்வதற்கில்லை. 

உள்ளே நுழைகையில்... உணர்வற்ற உருவங்களைக் கொண்ட வளாகம் போல இருந்தது. ஏதோ ஓர் ஆங்கில சினிமாவில் இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்கிறேன்.

நீண்ட அங்கி போன்ற கருப்பு உடையில்… யார் யார் யார் என்றே தெரியவில்லை. இது எந்த இடம் என்று கூட தெரியவில்லை. சிட்டியை தாண்டியதுமே கண்களை கட்டி விட்டார்கள். வண்டிச் சுற்றி சுற்றி வந்ததில் கிழக்கு மேற்கு திசை மாறி... வடக்கு தெற்காகி இருக்கலாம் என்றது நுட்பம். இன்னதென அறியாத மயக்கத்தில் இருக்கும்... முன் அறிவிப்பில்லாத பயங்கரங்களுக்கு இந்த முன்னுரை மர்மங்கள் தேவைப்படுகின்றன. பேராசையின் பெரு விசையை நுகர்ந்து கொண்டு தானாக சிரிப்பது போல... இருக்கிறது... இரவின் நுனியில்... பேரிலையாகி பெயரற்று போவது.

யாரோ யாரையோ அடித்துக் கொண்டிருந்தார்கள். அது அவனா அவளா என்று கூட தெரியவில்லை. சராமாரியாக குத்துகள்... உதைகள்… மிதிகள்... ஏறி ஏறி முதுகில் கால் முட்டிக் கொண்ட தாக்குதல்கள்... மிக மிக மோசமான உடல்மொழி… அடிப்பவருக்கும்... அடி வாங்குபவருக்கும்.

எதிரே அமர்ந்து இருந்தவர் உடல் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் கையில் மதுக்கோப்பையோடு பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் அப்படி ஒன்று அங்கு நடக்கவேயில்லை என்பது போல கையில்… புத்தகத்தோடு நடந்து கொண்டிருந்தார். 

எல்லார் முகத்திலும் முகமூடி. கண்கள் மூக்கு வாய்க்கு மட்டும் வட்ட நீட்ட கிழிந்த ஓட்டைகள். ஓட்டை வழியே தெரிந்தக் கண்களில் கனன்று கொண்டே இருந்த நெருப்பு ஜுவாலைகளை எதேச்சையாக காணுகையிலேயே உணர முடிந்தது.  

எதுவோ நிரம்பாதவர்கள் இங்கே கூடி எதையோ நிரப்புகிறார்கள். எதுவோ பற்றாதவர்கள் இங்கே கூடி எதையோ பற்றுகிறார்கள்.

அடித்து வீழ்த்தி விட்டு அவன் முன்னால் நின்று சிரித்த... அடித்தவன்... படக்கென்று அடிபட்டு சிதறிக் கீழே கிடந்தவன் முகத்தில்... சிறுநீர் கழிக்கத் தொடங்கினான். ஆங்காங்கே நின்றோர்… நடந்தோர் எல்லாரும் இப்போது சுற்றி நின்று பார்த்தார்கள். ஓவென கத்தி கூச்சலிட்டு அந்த நிகழ்வை கொண்டாடினார்கள்.

அடுத்தடுத்து இருந்தவர்களோடு வாயோடு வாய் வைத்து முத்தமிட்டு கட்டித் தழுவிக் கொண்டார்கள். கையை காற்றில் குத்தி குத்தி... எஸ்.. எஸ்... எஸ்... என்று சிலர் சொல்லி சொல்லி எம்பி எம்பி குதித்தார்கள். அவர்களுக்கு எதையோ நிரூபிக்க எதுவோ வேண்டி இருக்கிறது. கூட்டத்தில் இருந்து சற்று தள்ளி இந்த நிகழ்வில் எதிலும் கலந்து கொள்ளாமல் மூன்று பேர் மாறி மாறி தெரு நாய்களை போல புணர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முக்குக்கும் சுவர் உடையும் தவிப்பு. முகமற்ற மூவர் எதையோ இந்த உலகத்துக்கு சொல்ல விரும்புவது போல இருந்தது அவர்களின் நிர்வாண உடலின் நளினம்... வேகம்... வெறி.

"ராத்திரி நேரத்து பூஜையில்..." பாடலுக்கு ஒரு வயதான உடல் ஆடிக் கொண்டிருந்தது. முகம் மூடிய பக்குவத்தில், சுருக்கடைந்த இடுப்பு திறந்து கிடந்தது. 70 ஐ தாண்டி இருக்கலாம் கிழவியின் விடுதலைக்கு வயது. 

கால் நீட்டி அமர்ந்து கத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு கால்கள் விரிந்த நிலையிலேயே இருந்தன. தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தவள்... பீர் கோப்பையில் ஸ்ட்ரா போட்டு இடையிடையே உரிந்து கொண்டுமிருந்தாள். வேகமாய் வந்து கொண்டிருந்த ஒருவன்... கண்ணில் படுவோருக்கெல்லாம் பளார் பளார் என ஒரு அறை விட்டுக் கொண்டே வந்தான்.

அந்த கால் அகட்டி அமர்ந்திருந்தவளுக்கு அறையோடு சேர்த்துக் கால் நடுவே நச்சென்று முன்னங்காலை மடக்கி உதைத்தான். அந்தப் பெண் பீர் கோப்பையை தவற விட்டு கையால் யோனியைக் கவ்விக் கொண்டு தலை குனிந்தாள். எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன்... அவள் யோனியை உள்ளங்கை கொண்டுத் தேய்த்து விட்டான். அவள் முனங்கி கொண்டே சரிந்தாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தி தேய்த்துக் கொண்டிந்தவன் முதுகில்... கையில் வைத்திருந்த சாட்டையால் பளாரென வீசினாள். அவன் துள்ளி எகிறி விழுந்தான். அவன் காலைப் பற்றி இழுத்து அந்தப்பக்கம் வீசி விட்டு படக்கென்று அந்த கால் விரிந்தவள் முன்னால் நாயைப் போல நீண்டு படுத்தாள். எல்லாருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

'அய்யய்யயோ"  என்று பதறி ஓட ஆரம்பித்தேன். நால்வர் கூட்டம் என்னை விரட்டி பிடித்து அடித்து துவைத்தது. 

"புதுசு.. இவன்.. புதுசு... காலை உடைச்சி விட்ருங்க..." என்று யாரோ கத்துவது கேட்டது. 

"புதுசா... சிரிடா ங்கோத்தா..." என்று கேட்டவன் புணர்ச்சி வார்த்தைகளால் தொடர்ந்து அர்ச்சித்தான். 

உள்ளே ஏதேதோ அமிலம் சுரக்க... தேவையில்லாத நரக கதவை நான் நன்றாக திறந்து விட்டு விட்டேன் என்று பட்டது. மனதுக்குள் இரவு போரடிக்கும் என்பதைத் தாண்டிய பயம் மிளிர்ந்தது. இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று மனம் கணக்கு போட ஆரம்பித்தது. பட்டென்று மனதுக்குள் முளைத்த ஆயுதம் கொண்டு முழு பலத்தையும் திரட்டி ஒருவன் முகத்தில் குத்தினேன்.

பற்கள் உடைந்து கை கிழிந்தது. அதே நேரம் என் கன்னங்களில் ஐந்தாறு அறைகள் விழுந்தன. நானும் தட்டுத் தடுமாறி ஒருவனைப் பிடித்து… ஒருவனைத் தள்ளி கொண்டு எழுந்து கைக்கு கிடைத்தவனை கடித்து வைத்தேன். கடிபட்டவன்.. பூனையை போல முனங்கி கொண்டே நகர்ந்து விட... எதிரே ஒருத்தி வாகாக வந்து மாட்டினாள்.

எகிறி கழுத்திலேயே மிதித்தேன். எகிறிய அவள்... மீண்டும் அதே வேகத்தில் எகிறி வந்து என் வாயை கவ்வி உரிய ஆரம்பித்தாள். வாழ்நாளின் மொத்த முத்தத்தையும் கடித்தெடுக்கும் ஆவேசம். நானும் வேறு வழியின்றி ஒரு கட்டத்துக்கு மேல் உரிய ஆரம்பித்தேன். என் உடல்... தானாக நடுங்கியது. தவம் களைந்த மரத்தின் இலைகளை போல உதிர்ந்து விட உள்ளே ஓர் எண்ணம். 

மனதுக்குள் பயம் பற்றியது. என்ன நடக்கிறது இங்கே. இது தனி உலகமாய் இருக்கிறது. தனி தவமாக இருக்கிறது. எல்லா கோட்பாடுகளையும் அவிழ்க்கும் அம்மணமாக இருக்கிறது. சுதந்திரம் என்பது எதுவரை என்று தெரியாத விடுதலையை எல்லாரும் சுமக்கிறார்கள்.

எதிலிருந்து எதற்கு விடுதலை. ஏன் இத்தனை வன்மம். அன்பிலும் கூட.

"என்ன விட அறிவிலயும் கம்மி. வயசிலயும் கம்மி. அவனெல்லாம் எனக்கு மேனஜரா வந்து என்கிட்ட வேலை வாங்கறான். தேவிடியா பையன்..."

என்று சொல்லிக் கொண்டே ஒருவனை கீழே தள்ளி கழுத்திலேயே மிதித்துக் கொண்டிருந்தான் ஒருவன். 

"ஹா ஹா.. அடிங்க சார்... என்னை அடிங்க.. அப்போ தான்... என் மனசு சாந்தி ஆகும்.. நாலு வயது குழந்தையை ரேப் பண்ணவன் சார் நான்... எல்லாரும் என்னை அடிங்க... நான் சட்டத்துல மாட்டிக்கல. ஆனா, என் மனசுக்குள்ள மாட்டிகிட்டேன்... இப்டி அடிவாங்கறது கிளு கிளுன்னு இருக்கு..." என்று ஈ என கத்திக் கொண்டே அங்கும் இங்கும் குறியை பிடித்தபடி ஓடுபவனைப் பார்க்க பயமாக இருந்தது.

தொடை வரை இறுக்கிய ட்ரவுசரில் கறுப்பாடைக் கதகத்தக்க.. கண்கள் மூடி ஒருத்தி கதவோரம் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு விழும் எந்த அடியையும் அவள் பொருட்படுத்தவே இல்லை. ஒரு கல்லை போல அமர்ந்திருக்கிறாள். அவளின் கால்களின் வழவழப்பும் காய்த்து தொங்கும் மார்புகளும் அவளை பெண்ணென்று உறுதிப் படுத்தியது. 

அவளை சுற்றி நிலவொளி நில்லாமல் சுழன்று கொண்டே இருந்ததை உணர்ந்த போது யாராவது என்னை எட்டி மிதிக்க வேண்டும் போல இருந்தது. அவளைப் பார்க்க பார்க்கக் கிறுக்குத்தனம் கூடிக் கொண்டே போனது. அவள் காலில் விழுந்து முத்தமிட்டால் என்ன என்று கூட தோன்றியது. அத்தனை மினுமினுப்பு. வெள்ளை கால்களில் மாயாஜாலம் செய்திருந்தது மஞ்சள்.

பின்னால் இருந்து கையைப் பற்றி இழுத்தவன் என்னைத் திருப்பி புல் வெளிகளுக்குள் இழுத்து சென்றான். நொடி நேர தடுமாற்றத்தில் செய்வதறியாது பார்க்கையில்... என் கீழே அமர்ந்து... ஆஹ்... என்றான். 

என்ன செய்ய சொல்கிறான் என்று யோசிக்க யோசிக்கவே வேகமாய் வந்த ஒரு பெண் நடுமுதுகில் ஓங்கி மிதித்து... என்னை அவன் மேல் சரித்தாள்.

"அவன் தான் கேக்காரன்ல.. குடுடா.. பொட்டை..." என்று கத்தினாள். "வீட்ல ஒரு பொட்டை. இங்க ஒரு பொட்டை.." என்று கை கொட்டி சிரித்துக் கொண்டே..." ம்ம்ம்...' என்று என் கால் பெருவிரலைப்  பொய் கடி கடித்துச் சுவைக்க ஆரம்பித்தாள். வேகமாய் வந்த ஒரு தாத்தா... அவளின் தலை மயிரைப் பற்றி இழுத்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதி விட்டு என் முகத்தில் காரி உமிழ்ந்து... "போ.. போடா... தறுதலை... அப்பன் பேச்சை கேக்காத தறுதலை.." என்று கத்தினார். 

மூச்சு வாங்க கீழே விழுந்து அமர்ந்தேன். கண்கள் தானாக ட்ரவுசர் காரியை பார்த்தது. பால் நிலா நமைச்சல். பால் நிலா வெளிச்சம்.

பிடி கழன்ற தளர்தலை போல எங்கிருந்தோ வீசி எறியப்பட்டேன். உள்ளே அதே நிலா வேற்றுடையில்… அதே வளாகம்.. வீணை வாசித்துக் கிடந்தது.

"வசீகரா..." பாடல் ஒலித்துக் கொண்டிருக்க... நிர்வாணமாக இரு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்க முலையை பற்களால் கடித்து இழுத்து ஒரு ஒநாயைப் போல தவழ்ந்து கொண்டிருந்தவளுக்கு தான் சப்போர்ட் அதிகம். 

முலை கொடுத்தவள்... "இந்த முலையையும் கடித்து குதறி. "அப்படிதான் பேருந்தில் ஒருவன் செய்தான்.." என்று சொல்லிக் கொண்டே "அஹ்ஹ ஹாஹா..." என்று கிச்சு கிச்சு மூட்டப்பட்டவள் போல பாம்பின் நளினத்தை அங்கே புற்களுக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தாள். 

"வாடா... வந்து  என் முதுகெலும்பை அடிச்சு உடை" என்று ஒரு கிழட்டு வாய் முகமூடிக்குள் அசைந்து கொண்டே சாட்டையால் என்னை அடிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே நின்றவர்கள்... கவுண்டமணி காமெடி பார்ப்பது போல.. ஆவென பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கூட்டம் காமெடி முடிந்தும் குலுங்கி குலுங்கி சிரித்தது. எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. வந்தவள் அந்த கிழவனை தள்ளி விட்டு மிதித்தாள். அவள் காலில் அதே பச்சை நரம்பு பரவசம் கொண்ட பாம்பின் மினுங்கல் இருந்தது. மிதித்து உதைத்து அந்த கிழட்டு கால்களை பற்றி இழுத்து சுவற்றில் மோதி தெறிக்க விட்டு விட்டு சொன்னாள். 

"இவன்... நூறு குழந்தைகளை பிச்சை எடுக்க விட்டவன்..."

அந்த கிழவன் மண்டை உடைந்து ரத்தம் ஒழுக கத்தினான். "தாயி.. நீ நல்லா இருப்ப தாயி... இந்த கையையும் உடைச்சுவுடு தாயி..." அவன் சிரித்தான்.

நான் தலையை பிடித்துக் கொண்டு உலகம் சுற்றினேன். நிலவு என் முகத்தருகே வந்து தம் தம் என்று அரிசி குத்தும் சப்தத்தை கசிய விட்டது.

ட்ரவுசர்காரி என் கைகளை பற்றி இழுத்து கொண்டே ஓடினாள். அவள் ஓட ஓடவே.. அழுதாள்... சிரித்தாள். ஓடிக் கொண்டே இருந்தாள். வேர்த்து கால்கள் நடுங்க மூச்சிரைத்து ஓட முடியாமல் கீழே விழுந்தும் புல் தரையோடு தரையாக இழுத்துக் கொண்டே வட்டமடித்தாள்.

ஒரு பிசாசின் முனங்கலை அவளிடம் கண்டேன். தரையோடு கிடந்து சரிந்தபடியே சுழலுகையில் அவள் கால்களில் மயிறு முளைத்து ஒரு கரடியின் காலாக நொடியில் மாறுகையில் நான் மூர்ச்சையானேன்.

நான் என்னில் இருந்து மெல்ல விலகுவதை உணர்ந்தேன். தொடர்ந்து மனதுக்குள் அந்தக் கால்கள் மஞ்சள் மரங்களை நட்டுக் கொண்டே இருந்தன. 

மரக்கிளைகளில் முக்கால்வாசி நுழைந்த பிறகு கால்வாசிக்கு பல்லிளிக்கும் தெருநாயை போல உள்ளே ஒரு கிழிந்த சிரிப்பு நாக்கு தொங்க போட்டுக் கொண்டிருந்தது. ஆருடமற்ற அர்ப்பணிப்பை  இது மாதிரி இரவுகள் தட்டி எழுப்புவதை உள்ளே ஒரு தாடி கொண்ட முகத்தில் பச்சை நிறக் கண்கள் வனாந்தரத்திலிருந்து நீண்ட அங்கியில் எட்டிக் குதிப்பதை அடிக்கடி நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

அனாவசியங்களை அமைதிப்படுத்த ஆதி மந்தையை கிழித்து விட்டு உள்ளே எட்டி பார்க்கையில் குகை தாண்டிய குரூரம் மிக அன்யோன்யமாக பட்டது. இரவு தாமரை பூக்கச் செய்கிறது.

இரவின் சம்பளம் கண்கள் உருட்டி பார்க்கும் நாலாபுறமும் துளிர் விடும் வாசத்தை நுகர்கிறது. இரவு இயலாமையின் சோகத்தில் பூக்கிறது. உடன்படும் சொர்க்கம் இரவில் கால்கள் விரிக்கும் மாயத்தை நான் மிக மிக அற்புதமாக உணர்ந்தேன்.

ஒரு தனித்த குமரி கோழியின் நடையில் நான் அங்கே சென்றேன். ஆழ்ந்த ஆகிக் கொண்டிருந்த எல்லாமும் அவதானிப்பில் அங்கே அதுவாகவே தான் இருந்தது.

அவள் அருகே என்னை உணர்ந்தேன். அரூப கிடார் ஒலியின் விரல் அறுந்த சப்தம் கேட்டது. வாசித்த நரம்புகளின் இறுக்கம்... ட்ரின்க் ட்ரின்க் என்று எண்ணெயில் கண்கள் பொரிவதை போல எதையோ மீட்டியது. ஓங்கி பளாரென என் பிட்டத்தில் விழுந்த சாட்டையடியில் வாலறுந்த பல்லியைப் போல துள்ளி துள்ளி எழுந்தேன்.

துக்கம் சொல்லொணாமல் கைகள் கொண்டு பிட்டம் பிசைந்தது. ஆசை தீர வந்த அழுகையை முதலில் அடிவயிற்றில் இருந்து எக்கி அடக்கினேன். ஒரு காட்டு மாட்டின் பிரசவக் கதறலை கத்திப் பார்த்தேன். அவள் என் கைகளை விசுக்கென பற்றி தூக்கி கொண்டு அத்தி மரத்தின் பின்னால் சென்றாள். மடியில் போட்டுக் கொண்டாள். மறுதலிக்க முடியாத வாசம் அவளிடம். 

"நம்பு நீ நான் இன்று நேற்று.. எல்லாம் சரி ஆகும். நம்பாதே நேற்று இன்று நான் நீ எல்லாம் சரி ஆகும் என்று..."

குளறுபடிகளின் குவிதலை பிட்டத்தில் பின்னோக்கி தடவி சரி செய்தாள். நான் அழவில்லை. நானுக்கு அளவில்லை. அம்மணமாக வேண்டும் போல தோன்றியது. இரவின் திறவு எப்பக்கம் திரும்பினும்... கரு விழி மட்டும் உருட்டியது. மடியில் போட்டுக் கொண்டு கருப்பு முகமூடி தாண்டிய கண்களின் ஓட்டையில் இரு பூமிகள்... முன் பின் சுழன்றன. நான் அவளை சுவாசிக்க ஆரம்பித்தேன்.

எங்கிருந்து ஆரம்பித்தாள் என்று தெரியவில்லை. கனவை போல.. காட்சி திடும்மென நகரத் தொடங்கியது. அவள் நாக்கை என் வாய்க்குள் விட்டு துழாவினாள். பச்சை வாசம் அடித்தது.

மச்ச வாசம் என்ன வண்ணமென்று காண நான் வாயை நன்றாக திறந்து காட்டினேன். வாய்க்குள் வாய் வைத்து கதை சொன்னாள். கண்ட கண்களில் அது தான் யுக்தி என்றாள்.    

"மறு நாள் விஞ்ச்சுல போயிட்டிருந்தேன். 300 அடி உயரம். 300 அடியும் உயரம். மேலே இருந்து பார்த்தாவே... சாகனும் போல தோணும். அப்டி ஒரு அதிர்ச்சி கலந்த ஆர்கஸம் அது. எனக்கு என் கூட தான் போக பிடிக்கும். சுய இன்பத்துல ஒரு 'தான்' வெறி இருக்குல்ல. அது விஞ்ச்சுல தனியா போகும் போது இருக்கும். நம்பாட்டி போ எனக்கு இருந்துச்சு.

விழியிலே மலர்ந்தது... உயிரிலே கலைந்தது...

பெண்ணென்னும் பொன்னழகே... அடடா...

எங்கெங்கும் உன்னழகே..."

நானே ஆணாகி பாடினேன். நானே தானாக ஆடினேன்.

விஞ்ச்சுல அவ்வ்ளோ உயரத்துல... வானத்துல மிதக்கிற மாதிரி... வானமே மிதக்குற மாதிரி... மைதாமாவுல நிலா செஞ்சு ஒட்டிக்கிட்ட மாதிரி... திடீர்னு  என்னவோ நின்னுடுச்சு. காலுக்கிடைல... ரத்தம் சொட்டுது... அடிவயித்துல என்னவோ பிசையுது... தலைக்குள்ள யாரோ கத்தறாங்க... சொல்லு.. சொல்லு... ஐ லவ் யூ சொல்லு... இல்ல... இல்ல தள்ளி விட்ருவேன்... தள்ளி விட்டுட்டு... நானும் குதிச்சு விஞ்ச் கம்பிய புடிச்சு தொங்கி காப்பாத்துங்கன்னு கத்துவேன்.

நீ தண்ணிக்குள்ள விழுந்து செத்துருவ. நீ செத்துருவ.. நான் தப்பிச்சுக்குவேன்... ஸ்சொல்லுடி... இங்க வெச்சே உன் கூட செக்ஸ் வெச்சுக்கணும்... சொல்லுன்னு ஒரு ராட்சச குரல்... காதுக்குள் ஈட்டி வெச்சு சொருகுது... சத்தம் அதிகமாக அதிகமாக விஞ்ச்சு அசையுது... சத்தம் விஞ்ச்சை அசைக்குது... நான் கண்ணை மூடிக்கிட்டு கீழே விழுகிறேன்... தண்ணிக்குள்ள பூத்திருந்த மரத்தில விழுந்து ஒரு கிளை என் ஒரு கன்னத்துல குத்தி இன்னொரு கன்னத்துல வெளி வந்திருச்சு. 

பாறையில மோதி மூக்கு உடைஞ்சு... நெத்தி பிளந்து என் முகமே சிதறி போச்சு. அது தான்... அதுக்கு தான்... இந்த முகமூடி... உங்களுக்கெல்லாம் ராத்திரி தான் முகமூடி... எனக்கு பகல்ல... ராத்திரில... சாயந்தரத்துல... காலைல எப்பவுமே முகமுடி தான்..."

திடும்மென அவள் சொல்லிக் கொண்டிருந்த கதையில் இருந்து எங்கிருந்தோ வந்த கைகள் கொத்தாக என்னை அள்ளிக் கொண்டு சென்று மைதான நடுவில் போட்டது. 

என்ன நடந்தது என்று புரியாமல் கதைக்குள் ஒருவேளை பறந்து விட்டேனோ என்று பதறி மூச்சிரைக்க சுற்று முற்றும் பார்த்தேன். முரட்டு கைகளின் முகத்தில் மூச்சிரைக்கும் சுவாசம் முகமூடியைத் தாண்டி வார்த்தைகளாய் பெருத்து பெருத்து சிறுத்தது.  இரவு..." ஆஅஹ்..." என அலைந்துக் கொண்டே இருக்க...அசுர கொக்கிகளோடு அது கண்களை லைலாவை போல இப்டி இப்டி சிமிட்டிக் கொண்டிருந்தது.

"முகமூடி இடியட். அவகிட்ட போய் சிக்கிருக்க... அவ இதே கதையை சொல்லி... சொல்லி.. இங்க எட்டு பேர் மூஞ்சியைப் பேத்துருக்கா. இங்க வர்றதே வக்கிரத்தை போக்கிக்கறதுக்கு தான். மூஞ்சி தெரியக் கூடாதுங்கிற நொள்ளதனத்துக்கு தான் முகமூடி. மூஞ்சியே குழம்பி போறதுக்கில்ல. அவ பிசாசு..."என்று பெரிய புடுங்கி மாதிரி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தவனைத் தாண்டி என் மனம் அவளையே சுற்றியது.

அவள் சொன்ன கதையையே சுற்றியது. இந்தக் கதை ஏதோ ஒரு புள்ளியில் என்னை சுற்றிக் கொண்டிருக்கிறது. நான் தலை குனிந்திருந்தேன். என் மனம் தாறுமாறாக சுற்றியது. அவளின் வாசம் எனக்குள் சுவாசம் நிமிண்டியது.

"அந்த கதை கதையல்ல..." என்று என் மூளைக்குள் ஓடும் வின்ஞ்ச்சின் சத்தம்... நடுநடுங்க சொன்னது. இவள் அவளே தான். இவள் கதையின் ஆரம்பம் நான் தான். என் கதையின் நகர்வு தான் இவள். 

மலம்புழா அணையில் வின்ஞ்ச்சில் அவளோடு அமர்ந்திருந்த நண்பன் நான் தான். அவள் காதில் "லவ் யூ சொல்" என்று கத்தி பயமுறுத்தியது.. நானே தான். எல்லாமே விளையாட்டுக்கு எப்போதோ செய்தது. 

அவள் சொல்ல மறுக்க... தள்ளி விடுவது போல... பயங்கரமாக பயமுறுத்தி... அழ வைத்து.. மூர்ச்சையாக வைத்து... பிறகு சிரித்து.. சும்மா... தமாஸுக்கு என்று சொல்லி சிரித்தது... நானே தான். அது தான் பாதித்திருக்கிறது.

அதன் பிறகு அவள்.. தனியே வருகையில் அவளை அவளே தள்ளிக் கொள்ளும் தான் எதிர் பிம்பத்தை உருவாக்கி இருக்கிறாள். அதில் விழுந்தவள் முகம் மரக்கிளையில்... பாறையில்... கம்பிகளில் குத்தி குத்தி.. கூழாகி இருக்கிறது. 

ஐயோ...என் மூளைக்குள்...ஒரு அரைவேக்காட்டு கதை சொல்லி இஷ்டத்துக்கு முன் கதை சித்தரித்தான். உச்சு கொட்டினான். புலம்பினான். நான் எழுந்து சென்று பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவன் மேல் மோதினேன். மரத்தில் மோதி விழுந்தது போல வெயிட்டாக இருந்தது. .

முகத்தில் எதுவோ உடைந்த ஒழுகிய ரத்தம் வாயில் வழிந்தது. வாயில் உடைந்த எதுவோ புளிப்பாய் வழிந்தது. பெருமைப்பட்டுக் கொண்ட ரகசியம் அவளின் யோனியின் சுவையை போல என்றது. அவள் கொண்ட அடுத்தடுத்த போகத்தின் சுவையை போல என்றது. இன்னொரு முதுகில் முகம் கொண்டு மோதினேன். டமார் டமார் என்று என் வயது குறைந்து கொண்டே வந்தது. தூக்கம் வருவது போல இருந்தது 

சற்று நேரத்தில் விடியல் வந்து விடும். அதிகாலை வண்ணத்தில் அவள் சிரிக்கிறாளா அழுகிறாளா என்று தெரியாத குலுங்களோடு திரும்பி அமர்ந்திருந்தாள். நான் பின்னால் நின்றிருந்தேன். மூச்சு விடுதலில்... நெருக்கம் வேண்டினேன். அதிகாலை நேரத்திலும் அந்த கால்களில்... மஞ்சள் நிறம் மினுமினுத்தது.

எல்லாமே கனவு போல இருந்தது. விடியலில் காணும் உடலில் எல்லாரும் டை கட்டி.. காட்டன் புடவையில்... சபாரி சூட்டில்... அவரவர் வேலைக்கு அவரவர் சென்று கொண்டிருக்கிறார்கள். 

எல்லா மனிதனுக்கும் இன்னொரு முகம் இருக்கிறது. அது இரவில் வேற்றுருவத்தில் வெளி வருகிறது. ஆழ்மன வக்கிரங்களில் மிகச்சிறந்த பூக்களால் சூழப்பட்டிருக்கிறது. எல்லா விதமான இயலாமைகளும் தன் குரூரத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன.

பகல் முழுக்க ஆபீஸில் கொத்தடிமையாக கிடக்கும் பெண் இரவில் கழுவுகிறேன் என்ற பெயரில் பாத்திரங்களை போட்டு டங் டங்கென அடித்தெடுக்கும் செயலைப் போன்றது தான். வண்டியை முறுக்கிக் கொண்டு எங்கோ இருக்கும் கோபத்தை எங்கோ காட்டும் இளைஞனின் இயலாமையை போன்றது தான். புணர முடியாத கோபத்தில் தலை மயிர் பற்றி பொண்டாட்டியை அடித்து துவைக்கும் குடிகார தத்துவத்தை போன்றது தான்.

பகலில் பூக்களாகவும் இரவில் முட்களாகவும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் தானின் இம்சை இது. பகலின் வடிகால் இரவாய் கிடக்கிறது. இரவுகள் கதைகளால் ஆனவை. இரவின் கால்கள் எப்போதும் விரிந்தே கிடக்கிறது.

பகல் முடிந்தும்... முண்டியடிக்க ஆரம்பித்தது மனது. பகலின் போதாமை ராத்திரிக்கு நூல் விடுகிறது. ராத்திரிகள் வேதாளம் சுமப்பவை. கட்டுண்டு கிடக்கும் கடிவாளங்களின் டிராகுலா பற்கள் பியானோ வாசிக்கும் இரவுகட்டைகளில். தூக்கமின்மையின் துக்கம்... கண்கள் சிமிட்டி கொண்டாடும். எல்லாம் தாண்டி ட்ரவுசர்காரி மாயத் தூண்டில் இட்டிருக்கிறாள். பார்க்க வேண்டும் போல உந்தியது. இரவு நெருங்கி நெருங்க.. அந்த உலகம் "வா வா...' என்று காதுக்குள் கிசுகிசுத்தது. பயமாக இருந்தாலும்... இரண்டாம் நாள் பதட்டத்தைக் குறைந்திருந்தது. 

சுற்றுச்சுவர் கடந்து வளாகம் நுழையும் கதவருகே நின்று எட்டிப் பார்த்தேன். உள்ளே அவள் பின்னால் நின்று அவள் கழுத்தை கடிக்க தயாராகிக் கொண்டிருந்தேன்... நேற்றைய நான்.

- கவிஜி 

Pin It