வெற்றியின் வாசம் எப்பொழுதும்
ஒருவித நிம்மதியைத் தருகிறது.
 
ஒரு வெற்றிக்குப் பிறகான
கைக்குலுக்கல்கள் அழுத்தமாயிருக்கின்றன.
புன்னகைகள் பிரகாசமாயிருக்கின்றன.
பார்வையில் ஆளுமை குடிகொள்கிறது.
நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்.
 
இவை அனைத்தையும் விட முக்கியமாய்
நீங்கள் தோல்வியடையவில்லை
என்பதாகவும் இருக்கலாம்
ஒருவித நிம்மதியைத் தருவது.
 
- சசிதரன் தேவேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It