சுழற்றி எறியப்படும் நாட்களில் 
பின் சென்ற நாட்களின் 
ஏக்கங்கள் கனவுகளாய் 
உலா வருகின்றன உறக்கத்தில் ..

கண்ணீர் ஊறிய தலையணைகள் 
கவசம் தேடுகிறது இரவுகளில் 
ஊறிய தலையணையும் 
ஒற்றியெடுத்த தோள் துண்டும் 
பட்டிமன்றம் நடத்துகின்றன 
மறுபக்கம் இல்லா பாயில்...

கஞ்சி குடிக்க மறந்தோடிய
பொழுதுகளில் கனகாம்பரம் 
கேட்டனுப்பும் மனைவி 
கனகாம்பரம் எல்லாம் வியர்வை
 மணம் என்றாள் மாலையில்

குடித்த தண்ணீர் வயிற்றுக்குள்
இருந்தும் ஈரம் காணவில்லை 
தொண்டைக்குழி நாளங்கள்.. 
விழித்ததும்  தெரிந்தது
நித்திரையில் கனவுகளும் 
ஏக்கங்களாய் !!!........
 
- ஜீ.கே. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It