நாடென்ன செய்தது நமக்கு

Child labour

என கேள்விகள் கேட்பது எதற்கு?

நீயென்ன செய்தாய் அதற்கு

என நினைத்தால் நன்மை உனக்கு

தெருமுனை கூட்டத்தில்

லவுட்ஸ்பீக்கரில் அலறியது

தேசப்பற்று பாடல்.

தெருபொறுக்கும் சிறுவன்

சற்று நின்றுச்செல்கிறான் ரசித்தபடி.

அவனென்ன செய்துவிடமுடியும்?

ஒரு வாய் சோறு கூட

போடாத தேசத்துக்கு

பக்தியாக இருப்பதை தவிர.

- என். விநாயக முருகன்

 

Pin It