Beggarஎப்போதும்
தையல் கடையில்
காஜா போட்டுக் கொண்டிருக்கும்
சிறுவனும்

கோயில் வாசலில்
பூக் கூடையுடன்
நில்லாது அலையும்
சிறுமியும்

பள்ளிக்குச் செல்லாது
பாண்டி பஜாரில்
கடைக்குள்ளார வந்து
பார்த்துப் போகச் சொல்லும் சிறுவனும்

எம்மா
பழம் வாங்கிட்டுப் போம்மா என
சத்தம் கொடுத்துக் கொண்டே
தன் உயரக் குழந்தையை
தன் இடுப்பில் சுமக்கும்
சிறுமியும்

சாலையில்
கைகளில் தட்டு ஏந்தி
இயர் பட் (ear bud)
வாங்கச் சொல்லும் சிறுவனும்

ரெங்கனாதன் தெருவின்
நெரிசலுக்கிடையே
ஒரு மணி நேரத்தில்
சுடிதார் தைக்கணுமா
கொடுங்க நாற்பது ரூபாய்தான் என
வலிய அழைக்கும் சிறுவனும்

காண்கையில்

இவர்களெல்லாம் குழந்தைத் தொழிலாளிகள்
இல்லையோ என்று
இன்னும் சந்தேகமாய் உள்ளது


மதுமிதா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It