1.

அவள் அண்ணாந்து
மோட்டுவளை
கூரையில்
ஓடிக்கொண்டிருந்த
அணிலைப்
பார்த்த கணம்
உதித்தது ஒரு நுட்பம்

எழுந்து ஈரமண் சொறிந்த
வீட்டுத் தோட்டத்தில்
ஒரு பழ விதையை
நட்டாள்
அது முளைத்து,
விரிந்தது
ஆதி நினைவிலிருந்த
பழங்கள் தொங்கும் பெருங்காடு

2.

............. நடனம்

காலை வேளையென்றால்
குயிலின் ஓசை போதும்
அவளுக்கு

அந்த ஓசை
லயத்துக்கு ஏற்றார் போல
வெளியெங்கும்
நடனம் கொள்வதை
மன ஸ்வரத்தில்
பொத்திக்கொண்ட
கணம்
காலத்தில் விரிகிறது
அவள் ஆதியில்
திரிந்த காடு

- மாரி.கிருஷ்ணமூர்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.