girl in isolated areaநினைவின் வெளியில் குதித்தவன்
மீண்டும் திரும்பவேயில்லை

மீன்களுக்கு புழு போல
சொற்களுக்கு இவன்

ஆட்காட்டி விரலையும பெருவிரலையும் குவித்து
தெருவில் பட்டாம்பூச்சி பிடித்துப் போகின்றவனை
புன்னகையில் கடந்து போகும் உதடுகள்
பிறகு குற்றவுணர்வு கொள்கின்றன

சுழன்று வரும் பிரபஞ்சமென
உதிரும் அரச மரத்திலை ஒன்று
முகத்தை வருடிச் செல்கிறது

பால் பேதமற்ற வெளியில்
ரூபத்திற்கும் அரூபத்திற்குமான
மங்கிய ஒளியில்
நிற்கும் அவன் மீது
இலைகளென உதிரும் பொழுதுகள்
தங்களை புதைத்துக் கொள்கின்றன

பிரக்ஞைக்கும் வெளியே
அறிமையால் பிதற்றும் இவனை
இரவும் மன்னித்துக் கொண்டேயிருக்கிறது
தன் பங்கிற்கு

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.