எந்த பெண்ணின் நட்புலகில்
நுழைந்தாலும் அவர்கள் இருக்கிறார்கள்
நரை கூடாத நயமிக்கவர்கள்
மூச்சடக்கி புகைப்படத்தில் முத்தெடுக்கிறார்கள்
மாலைக்கண் வியாதி போல
ஆண் கவிகள் அவர்களுக்குத் தெரியார்
பெண் கவிதைகளுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ்
குத்தகைக்கு எடுத்தோர்கள் அவர்கள்
பெண்ணுரிமைக்கு முன்னால் நிற்பார்கள்
பின் இன்பாக்சில் வாட்சப் எண் கேட்பார்கள்
இருட்டு தேடும் வெளிச்சம் வாங்கிகள் அவர்கள்
விதவிதமான கண்ணாடிகள்
அவர்கள் வார்த்தைகளில் இருக்கின்றன
மறந்தும் ஆண்கள் பக்கம் போய் விடாத அவர்கள்
ஒருபோதும் புகைப் படத்தில் கூட தங்களை
மாற்றிக் கொள்வதில்லை
அவர்களின் அடையாளம்
பூசிக் கொள்ளும் சாயத்தில் மட்டுமல்ல என்பதை
கண்டுபிடித்த பின் தான் வேறு வழியின்றி
பகிரங்கப் படுத்த வேண்டியதாகி விட்டது
என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்
அவர்கள் என்னை தாக்காதிருக்க
என்னிடம் இன்னொரு பெண் பெயர் இருக்கிறது....!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.